ரிஷப் பந்த், இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே முதல்: பாண்டியாவின் பவுலிங் சராசரி: சுவையான தகவல்கள்

By செய்திப்பிரிவு

இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியில் நாட்டிங்கமில் விளையாடி வருகின்றன. இதில் 2ம் நாள் ஆட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ரிஷப் பந்த் 5 கேட்ச்களை எடுத்து புதிய இந்திய சாதனையை நிகழ்த்தினார்.

உலக அளவிலேயே அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 கேட்ச்களைப் பிடித்த விக்கெட் கீப்பர்கள் இருவர்தான் ஆஸ்திரேலியாவின் பிரையன் டேபர் (1966), ஜான் மெக்ளீன் (1978) இருவர் மட்டுமே அறிமுக விக்கெட் கீப்பர்களாக 5 அல்லது அதற்கும் மேற்பட்ட கேட்ச்களை எடுத்துள்ளனர்.

நேற்று ரிஷப் பந்த் இங்கிலாந்தின் முதல் 3 விக்கெட்டுகளுக்கான கேட்ச்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய ஸ்லிப் பீல்டிங் சொதப்பிக் கொண்டிருக்கும் போது 3 கேட்ச்கள் பிறகு 5 கேட்ச்கள் என்று உற்சாகம் காட்டினார்.

ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் சராசரி இந்தத் தொடரில் 17.50. இது இந்திய பவுலர்களிலேயே சிறப்பான சராசரியாகும். 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 24.80 இங்கிலாந்து பவுலர்களுக்குக் கூட இல்லை.

இந்தத் தொடரில் ஒரு அணி 60 ஓவர்களுக்குள் 5 முறை இதுவரை ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து தொடர்களில் இதுதான் அதிகம், கடந்த 15 ஆண்டுகளில் இங்கிலாந்தில் இந்தத் தொடரில்தான் இப்படி நடந்துள்ளது.

இந்திய அணியின் 168 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலைக்கு முன்னதாக 2007 தொடரில் ஓவல் மற்றும் டிரெண்ட் பிரிட்ஜில் முறையே 319 மற்றும் 283 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸி.யிலோ, தென் ஆப்பிரிக்காவிலோ இந்தியா இவ்வளவு பெரிய முன்னிலை பெற்றதில்லை. நியூசிலாந்தில் 3 முறை இவ்வளவு பெரிய முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

158 பந்துகளில் இங்கிலாந்து தன் 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது இதுவே முதல் முறை. அதாவது தொடக்க வீரர்கல் குக், ஜெனிங்ஸ் 71 பந்துகள் ஆடி 54 ரன்களைச் சேர்த்த பிறகு 158 பந்துகளில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆகி சரிவு கண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE