பவுலிங், பேட்டிங், ரன் அவுட், கேட்ச்... ஊஹூம்...: வரலாற்றில் இடம்பெற்ற இங்கி. வீரர் ரஷீத்

By இரா.முத்துக்குமார்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் வீழ்த்தியது, இந்த டெஸ்ட் போட்டியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஏதாவது பங்களிப்பு செய்துள்ளார்கள். ஆனால் இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷித்?

1974க்குப் பிறகு மிகப்பெரிய தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. ஆனால் இவ்வளவு நடந்துள்ளது ஆதில் ரஷீத் இதில் ஒன்றுமே செய்யவில்லை என்பது விநோத, தனித்துவ சாதனையாகியுள்ளது. அதாவது 11 வீரர்கள் கொண்ட விளையாடும் லெவனில் இடம்பெற்று ஒன்றுமே செய்யாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் கப்சிப்பாக ஆடிய வகையில் ரஷீத் பெயர் வரலாற்றில் இடம்பெற்றது.

கடந்த 13 ஆண்டுகளில் இப்படி ஒன்றுமே செய்யாத 14ம் வீர்ராக ரஷீத் சாதனை புரிந்துள்ளார். அதாவது பேட்டிங் செய்யவில்லை, பவுலிங் செய்யவில்லை, பீல்டிங்கில் ரன் அவுட் செய்யவில்லை, கேட்ச் எடுக்கவில்லை. இப்படி ஒன்றிலுமே இடம்பெறாத 14வது வீர்ரானார் ரஷீத், ஆனால் உலக அளவில் 14வது வீரர், இங்கிலாந்தைப் பொறுத்த வரை முதல் வீரர்.

ஸ்லிப்பில் நின்றிருந்தாலாவது கேட்ச் வந்திருக்கும் பிடித்திருக்கலாம் அல்லது கேட்சை விட்டது மூலமாக ஏதாவது செய்த பட்டியலில் இடம்பெற்றிருப்பார், ஆனால் இப்படி ஒன்றுமே செய்யவில்லை என்பது ஒரு தனித்துவ விநோதமே.

இதற்கு முன்னதாக இப்படி ஒன்றுமே செய்யாத வீரர்களின் பட்டியல் வருமாறு:

பெர்சி சாப்மேன், பிரையன் வாலண்டைன், பில் ஜான்சன் (இருமுறை), அர்ஜுன் கிரிபால் சிங், நரி காண்டார்க்டர், கிரெய்க் மெக்டர்மட், ஆசிப் முஜ்தபா, நீல் மெக்கன்சி, ஆஷ்வெல் பிரின்ஸ், காரெத் பாட்டி, ஜாக் ருடால்ஃப், விருத்திமான் சஹா, தற்போது ஆதில் ரஷீத்.

எட்ஜ்பாஸ்டனில் 13 மற்றும் 16 ரன்கள் பிறகு 3 விக்கெட்டுகள் என்று இங்கிலாந்து வெற்றியில் பங்களிப்பு செய்தார் ரஷீத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்