அர்ஜெண்டினா அணி நேற்று உலகக்கோப்பைக் கால்பந்திலிருந்து வெளியேற பிரதான காரணமாக அமைந்த பிரான்ஸ் வீரர், 19 வயது இளம்புலி கிலியான் பாப்பே 2 கோல்களையும் முதல் கோலுக்கு மின்னல் காரணமாகவும் அமைந்தவர்.
ஆட்டம் தொடங்கி 13ம் நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மென் முதல் கோலை பெனால்டி மூலம் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் அதற்கு சில விநாடிகளுக்கு முன் நடந்தது உலக நட்சத்திர வீரர்களான பீலே, மாரடோனா, ரொமாரியோ, பிரேசில் ரொனால்டோ, பேக்கியோ உள்ளிட்ட சில பேர்களுக்குத்தான் கைகூடும், ஏனெனில் அவ்வளவு வேகம்.
பந்தை பிரான்ஸ் பகுதிக்குள் அர்ஜெண்டினா உடைமையை இழக்க பந்தை ஒரு அழகிய கிராஸ் மூலம் பெற்றார் கிலியான் பாப்பே, ஆனால் அதன் பிறகு 75 யார்டுகள் பந்தை அவர் எடுத்து சென்ற மின்னல் வேகம் நம்ப முடியாதது, அர்ஜெண்டினாவின் அனைத்து வீரர்களும் அவர் பின்னால் வரிசை கட்டி ஓடிவரச் செய்தார், பனேகா, தாக்லியாபிகோ இருவரும் தங்களுக்குள்ளேயே குழப்பத்தில் ஆழ்ந்ததால் வந்த விளைவு, பந்தை எடுத்த கிலியான் பாப்பே 100 மீ உலக சாம்பியன் உசைன் போல்ட்டானார். அவரைப் பிடிக்க வழியே இல்லை.
வலது புறம் பந்தை தள்ளிச் சென்றார். ரோஜோவிடமிருந்து விலகிப் பந்தை நகர்த்தினார், ஆனால் ஓபன் கோல், ஆளில்லை வேறு வழியில்லை, ரோஜோ தியாகம்தான் செய்தார், வேண்டுமென்றேதான் மின்னல் வேக பாப்பேவை கீழே தள்ளினார், பெனால்டி வரும் என்றேதான் தள்ளினார், பெனால்டி கொடுக்கப்பட்டது. ஆனால் பாப்பேவின் அந்த வேகம் நீண்ட நாள் கழித்து தங்கள் பகுதியிலிருந்து பந்தை பரபரவென எடுத்துச் சென்று எதிரணியினரின் 9-10 வீரர்களை தன் பின்னால் பரபரக்க ஓடிவரச் செய்ததைப் பார்க்க முடிந்தது, பெனால்டி பகுதிக்குள் நுழைந்து கோல் அடிக்க வேண்டியதுதான் பாக்கி ரோஜோ அவரை கீழே தள்ளினார், பெனால்டி கிக்கில் கிரீஸ்மென் கோல் அடித்தார். ஒருவேளை அவர் போன வேகத்துக்கு அவரே ஷாட் அடித்திருந்தால் கூட வேறு மாதிரி நிகழ்ந்திருக்கலாம் ஆனால் ஃபவுல் செய்யும் பதற்றத்தை ஏற்படுத்தியதுதான் கிலியான் பாப்பேவின் ஆட்டத்திறன்.
அதன் பிறகு அர்ஜெண்டினாவின் ஏஞ்செல் டி மரியா அடித்த கோல் உண்மையில் நம்ப முடியாதது. மெஸ்ஸிக்கு கார்னர் வாய்ப்புக் கிடைக்க அதனை பவார்ட் தட்டி விடுகிறார் உடனே இடது புறம் த்ரோ வாய்ப்புக் கிடைக்கிறது. அதனை ஒத்தைக்கு ஒத்தை ஆடி பிறகு டிமரியாவிடம் கொடுக்கின்றனர் அங்கு அவரை மறிக்க ஆளில்லை, பந்து வந்ததும் எல்லோரும் பாஸ்தான் செய்வார் என்று எதிர்பார்த்திருப்பார்கள், ஏனெனில் அந்தத் தூரத்திலிருந்து கோல் முயற்சி செய்தால் அது வீணே என்று நினைத்திருப்பார்கள் ஆனால் அவர் இடது காலால் அடித்தார் பாருங்கள் ஒரு அடி கோல்வலைக்கு மேல் மூலையில் போய் இடித்தது அனைவரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் தாக்குதலில் மெர்காடோ அழகாக பந்திற்கு திசை கொடுத்து கோலாக மாற்ற 2-1 என்று முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பிரான்ஸ் இடது புறம் தாக்குதல் தொடுக்க கிராஸ் ஒன்று பிரான்ஸ் வீரர் பேவர்டிடம் வர இது வரை கோல் அடிக்காத அவர் வலது காலால் அற்புதமான கோலை அடித்து சமன் செய்தார் 2-2.
கிலியான் பாப்பேவின் கடைசி 2 கோல்கள்:
ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் பிரான்ஸின் போக்பா ஒரு பாஸை ஹெர்னாண்டஸுக்கு அடிக்க, அவர் அடித்த கிராஸை கையாள ஆளில்லை. பந்து கிலியான் பாப்பேவுக்கு வருகிறது, அவர் பந்தை சிறிது எடுத்துச் சென்று தடைகளைத் தாண்டி தாழ்வாக அர்மானியைத் தாண்டி அடித்தார் பிரான்ஸ் 3-0.
மீண்டும் 68வது நிமிடத்தில் அர்ஜெண்டினா நடுக்கள வீரர்கள் நிறைய இடைவெளி கொடுக்க பிரான்ஸ் பாஸ் எளிதானது. பந்து ஜிரவ்டுக்கு வருகிறது, அர்ஜெண்டினா தடுப்பு இருந்தும் இவருக்கு கொஞ்சம் இடம் கிடைத்தது, கிலியான் பாப்பேவை மறிக்க அர்ஜெண்டினா தவறியது, பாஸ் பாப்பேவிடம் வர அவர் ஓடிகீடியெல்லாம் அடிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை, பந்தை கண நேரத்தில் கீழ் வலது மூலைக்கு வலைக்குள் தள்ளினார். அனைவரும் வியந்தனர். காரணம் அவருக்கு வயது 19தான், ஆனால் இந்த கோலை அர்மான் தடுத்திருக்கலாம். இந்த 2 கோல்களும் அர்ஜெண்டினாவை வெளியேற்றின.
கிலியான் பாப்பேவுக்குப் புகழாரம்:
கேரி நெவில் கூறும்போது, “அடுத்த 3,4,5 ஆண்டுகளில் கிலியான் எந்த உயரத்தில் இருப்பார் என்றுதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இது உண்மையில் அவர் கரியரில் ஒரு முக்கியமான தருணமாகும்.
லியோனல் மெஸ்ஸியின் அருகில் ஆடுகிறார், அதில் மெஸ்ஸியை ஓரங்கட்டிய ஆட்டத்தை ஆடினார். அன்று ஸ்பெயினுக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ன செய்தாரோ அதை கிலியான் பாப்பே இன்று செய்தார்.
1958-ல் டீன் ஏஜ் வீரராக ஸ்வீடனுக்கு எதிராக உலகக்கோப்பையில் பீலே இரு கோல்களை அடித்தார். அந்தச் சாதனையை 60 ஆண்டுகளில் சமன் செய்தார் டீன் ஏஜ் வீரர் கிலியான் பாப்பே.
ஆனால் அவர் மகா ஒப்பீடுகளை அவர் கூச்சத்துடன் மறுத்தார், “எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, பீலே போன்றோருடன் ஒப்பிடுவது மயக்குவதாக உள்ளது. ஆனால் அவர் வேறொரு லெவல். இருந்தாலும் சாதனைப் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பாப்பே.
டெஸ்சாம்ப் புகழ்ந்து கூறுகையில், “பிரேசில் ரொனால்டோ ஒரு முன்கள வீரர் அவர் மிகவும் விரைவானவர், ஆனால் கிலியான் அவரை விடவும் விரைவானவர். ஆனால் ரொனால்டோ ஒரு உலக சாம்பியன், பாப்பேவுக்கு வயது 19தான். அவர் பெரிய முன்னேற்றம் காண்பார்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago