அபாய வில்லியான் அபார ஆட்டம்; நெய்மர், ஃபர்மினோ கோல்கள்: மெக்சிகோவை வழியனுப்பி காலிறுதியில் பிரேசில்

By இரா.முத்துக்குமார்

இந்த உலகக்கோப்பையில் பிரேசிலின் ஆட்டம் அதற்கேயுரிய அந்த வித்தியாசங்களுடனும், வண்ணங்களுடனும் களைக் கட்டத் தொடங்கியுள்ளது. இன்று சமாராவில் நடந்த இறுதி 16 ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது பிரேசில்.

இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இடைவேளைக்குப் பிறகு வில்லியன் நெய்மர் கூட்டணியில் 51வது நிமிடத்தில் நெய்மர் மிக அருமையான கோலை அடித்தார், பிறகு கடைசியில் 88வது நிமிடத்தில் ஃபர்மினோ இன்னொரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

உண்மையில் சொல்லப்போனால் மெக்சிகோவுக்கு வாய்ப்புகள் வந்தாலும் ஒரேயொரு வாய்ப்பைத்தான் கோல் வாய்ப்பு என்று கூற முடியும், அதுவும் இடைவேளைக்குப் பிறகு கோல் வலைக்குள் செல்லும் நேரத்தில் பிரேசில் கோல் கீப்பர் எம்பி அதனை வெளியே தட்டி விட்டார், விளைந்த கார்னர் வாய்ப்பையும் பிரேசில் தடுப்பணை ஊதியது. இந்த முதல் கோல் பிரேசில் உலகக்கோப்பையில் அடிக்கும் 227வது கோல், இதில் பிரேசில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

இடைவேளை வரை: முதல் 20-25 நிமிடங்களுக்குப் பிறகு மெக்சிகோவுக்கு கடும் குடைச்சல் கொடுத்த பிரேசில்:

தொடக்கத்தில் மெக்சிகோ கொஞ்சம் பிரேசில் பகுதிக்குள் ஊடுருவியது, அப்படி ஊடுருவிய போதுதான் மெக்சிகோவின் அபாய வீரர் ஹிர்விங் லொசானோ அடித்த கோல் நோக்கிய ஷாட்டை பிரேசிலின் மிராண்டா தடுத்து விட்டார், இவ்வாறு நிறைய பிரேசில் தடுப்பு வீரர்கள் தடுத்து விட்டனர். மாறாக பிரேசில் ஊடுருவிய போதெல்லாம் ஒரு 4-5 கோல் நோக்கிய ஷாட்களை மெக்சிகோவின் அனுபவ கோல் கீப்பர் கில்லர்மோ தடுத்தும் தட்டியும் மெக்சிகோவின் விதியை இழுத்துச் சென்று கொண்டிருந்தார்.

5வது நிமிடத்திலேயே நெய்மர் ஷாட் ஒன்று கில்லர்மோ ஓச்சோவா கையைப் பதம் பார்த்தது. ஒவ்வொரு முறை மெக்சிகோ முன்னேறிச் சென்று இடது புறத்திலிருந்து தாக்குதல் தொடுக்கும் போதும் பிரேசிலின் தடுப்பாட்டம் மெக்சிகோவின் முயற்சிகளை எளிதாக முறியடித்தது, பிரேசில் நன்கு திட்டமிட்டபடி ஆடியது.

15வது நிமிடத்தில் ஹிர்விங் லொசானோ அருமையாக ஆடி ஃபெலிப்பேவைக் கடந்து பந்தை வேகமாக குறுக்கு பாஸ் செய்தார். பிரேசில் பெனால்டி பகுதிக்குள் வந்தது ஆனால் ஜேவியர் ஹெர்னாண்டஸ் அங்கு சரியான இடத்தில் இல்லை மிகவும் தள்ளி இருந்தார். இவ்வாறு சில பாஸ்களில் சரியான இடத்தில் மெக்சிகோ வீரர்கள் இல்லை. ஒருமுறை கார்லோஸ் வெலா அடித்த ஷாட்டுக்கு அங்கு இருந்த ஹெக்டர் ஹெரேரா பந்து வந்தவுடனேயே அடிப்பதை விடுத்து இடது காலால் மறுபடியும் வெட்டி ஆட முயன்ற போது மஞ்சள் கோட்டை சூழ்ந்தது. நல்ல கோல் வாய்ப்பு விரயம் செய்யப்பட்டது. முதல் 20-25 நிமிட ஆட்டத்தை வைத்து வர்ணனையாளர்கள் பிரேசிலின் பலவீனம், எப்போது வேண்டுமானாலும் கோல் வாங்கலாம் என்ற ரீதியில் பேசத் தொடங்கினர், ஆனால் அவர்கள் பதட்டமில்லாமல் மெக்சிகோ எவ்வளவு முறை வேண்டுமானாலும் வா, ஆனால் கோல் கிடையாது என்பதில் திட்டவட்டமாக இருந்தனர்.

மாறாக 26வது நிமிடத்தில் நெய்மரிடம் பந்து வர அவர் எட்சன் அல்வாரேஸுக்குப் போக்குக் காட்டி கடந்து வந்து இறுக்கமான கோணத்தில் அடித்த ஷாட்டை கில்லர்மோ தடுத்தார். 26வது நிமிடத்தில் பிரேசிலுக்கு ஃப்ரீ கிக் பாக்சிற்கு வெளியே கிடைத்தது நெய்மர் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை அனுப்பினார், கேப்ரியல் ஜீசஸ் காலில் பந்து பட்டது, அதன் பிறகு ஓரிரு நிமிடங்களுக்கு மெக்சிகோ வயிற்றில் புளியைக் கரைத்தனர் பிரேசில். கடும் நெருக்கடிக்குப் பிறகு கில்லர்மோ ஒச்சாவ் பந்தைத் தட்டி விட்டு நிம்மதிப் பெருமூச்செறிந்தார். இது முடிந்தவுடனேயே கேப்ரியல் ஜீஸஸ் அடித்த ஷாட்டை அயாலா தடுத்தார், பிலிப் கூட்டினியோ அடித்த ஷாட் கோல் மேல்கம்பிக்கு மேல் சென்றது. மெக்சிகோ சிறிது நேரம் ஆடிப்போய் விட்டது.

29வது நிமிடத்தில் அழகான ஒரு லாங் பால் வந்தது அதனை கார்லோஸ் செலா பெற்று தொலைவிலிருந்தே கோல் முயற்சி மேற்கொண்டார் வெற்று தனிமனித முயற்சி, மாறாக ஜேவியர் ஹெர்னாண்டஸ் அங்கு கோல் அடிக்கும் நிலையில் இருந்தார், அவரிடம் பாஸ் செய்திருக்க வேண்டியதை வெலா வீண் செய்தார்.

32வது நிமிடத்தில் மீண்டும் பாலினியோ மையத்தில் வேகம் காட்டினார் பிறகு வலது புறம் அபாய வில்லியானிடம் பந்தை அடிக்க அவர் அழகாக கேப்ரியல் ஜீஸசுக்கு அடிக்க அவர் அதனை மெக்சிகோ பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று ஒரு கோல் முயற்சி மேற்கொண்டார் ஆனால் மீண்டும் கில்லர்மோதான் மெக்சிகோவைக் காப்பாற்றினார். ஆனால் அவர் தட்டி விட்ட பந்து 7 அடியில் பிரேசிலுக்கு இன்னொரு கோல் வாய்ப்பாக அமைந்தது ஆனால் இம்முறை மெக்சிகோ வீர்ர கொலார்டோ தடுத்து விட்டார்.

முதல் 20-25 நிமிட ஆதிக்கத்துக்குப் பிறகு மெக்சிகோவுக்கு முழுதும் திக் திக் கணங்கள்தான். 39வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த நெருக்கடி தாங்காமல் எட்சன் அல்வாரேஸ் ஃபவுல் செய்ய மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டார். 40வது நிமிடத்தில் நெய்மர், கூட்டினியோ அபாயக் கூட்டணி இணைந்து நெருக்கடி கொடுத்து பந்தை வில்லியானுக்கு வலது உள்புறம் கிராஸ் செய்ய வில்லியான் பந்தை விறுவிறுவென கோல் நோக்கி சற்று நகர்த்தி ஷாட் ஒன்றை கோல் நோக்கி முயன்றார். ஆனால் கில்லர்மோ உடனடியாக அதனைக் கணித்து தடுத்து விட்டார். இடைவேளையின் போது 0-0.

வில்லியானின் திடீர் ஆக்ரோஷ எழுச்சி, கோல்கள், மெக்சிகோ ஆட்கொள்ளப்பட்ட கதை:

இடைவேளை முடிந்தகையுடன் 48வது நிமிடத்தில் கார்னர் ஷாட்டை நெய்மர், பிலிப் கூட்டினியோவுக்குக் கொடுக்க, இருவரும் மெக்சிகோ பெனால்டியை நோக்கி பாய்ந்தனர், கூட்டினியோ பந்தை வெட்டி மெக்சிகோ பெனால்ட்டி பகுதிக்குள் கொண்டு சென்று வலது காலினால் ஒரு பெரிய கோல் உதைக்குத் தயாரான போது மெக்சிகோவை மீண்டும் வலது புறம் டைவ் அடித்துக் காத்தார் கோல் கீப்பர் கில்லர்மோ.

பிரேசில் ஆதிக்கம் தொடர நெய்மர் கோலுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அந்தக் கணம் வாய்த்தது. மெக்சிகோ பெனால்டி பகுதிக்குள் பந்தை நெய்மர் பின்பாஸ் செய்தார், மிகவும் அருமையான ஒரு யோசனை அது. பின் பாஸை வில்லியானுக்குச் செய்ய வில்லியான் அங்கு சிலபல கால் வித்தைகளைக் காட்டி அபாயகரமான ஒரு பாய்ச்சலில் மெக்சிகோ தடுப்பைக் கடந்து பெனால்டி பகுதிக்குள் ஊடுருவி கோல் பகுதிக்குள் பந்தை தாழ்வாக அனுப்பினார், அங்கு நெய்மர் வரிசையில் 2வதாக இருந்தார், பந்து வந்தவுடன் சறுக்கியபடி பந்தை கோலுக்குள் திணித்தார். பிரேசில் முன்னிலை பெற்றது.

அப்போது முதல் வில்லியான் அபாயகரமான சில மூவ்களை வலது புறம் தொடுத்தார், வலது புறத்திலிருந்து அவர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பந்தை உள்புறம் கொண்டு சென்று ஊடுருவத் தொடங்கிய போதும், இது சீராக அடுத்தடுத்து நடந்த போதும் நமக்குப் புரிந்ததெல்லா மெக்சிகோ கதை முடிந்தது என்பதே. 56வது நிமிடத்தில் வில்லியன் ஒரு பந்தை அப்படித்தான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் எடுத்துச் சென்று கோல் அடிக்கும் அபாய பகுதிக்குள் வர ஹெக்டர் ஹெரேரா அவரை ஃபவுல்தான் செய்யமுடிந்தது. இதனால் அவர் புக் செய்யப்பட்டார். அடுத்த போட்டியில் இவர் ஆட முடியாது. நெய்மர் எடுத்த ஃப்ரீ கிக், மெக்சிகோ பெனால்டிப் பகுதிக்கு வர அதனை ஹியுகோ அயாலா தலையால் வெளியேற்றினார். 58வது நிமிடத்தில் பிலிப் லூயிஸ் பந்துடன் முன்னேறிச் சென்று நெய்மாரிடம் அளித்தார், பாக்சிற்கு ஓரத்தில் வில்லியனிடம் அனுப்பினார் நெய்மர், வில்லியன் சிலபல போக்குகளைக் காட்டி பாஸை ஃபாக்னருக்கு அனுப்பினார் அவர் பாலினியோவுக்கு அனுப்பினார், அப்போது ஒரு 15 அடியிலிருந்து பாலினியோ அடித்த ஷாட் மீண்டும் கில்லர்மோ ஓச்சாவினால் தடுக்கப்பட்டது. 63வது நிமிடத்தில் தேவையில்லாமல் ஒரு ஃபவுல் செய்து பிரேசில் வீரர் காஸ்மிரோ மஞ்சள் அட்டை வாங்கினார் அடுத்த போட்டிக்கு இவர் இல்லை.

64வது நிமிடத்தில் மீண்டும் வில்லிய பந்துடன் வெட்டி உள்ளே வந்து ஒரு அபாரமான ஷாட்டை அடிக்க கில்லர்மோ அதனை தள்ளி விட கார்னர் வாய்ப்பு பிரேசிலுக்குக் கிடைத்தது. அது கோலாகவில்லை. 67வது நிமிடத்தில் வில்லியான் வலது புறத்திலிருந்து பந்தி இடது புறம் கொண்டு வந்து நெய்மருக்குக் கொடுத்தார், நெய்மரின் ஷாட்டினால் ஒரு பயனும் இல்லாமல் போனது, ஆனால் வில்லியன் அங்கு தன்னலமற்று ஆடினார். வில்லியான் இடைவேளைக்குப் பிறகு கொடுத்த அச்சுறுத்தல் அவரை இனி வரும் போட்டிகளில் எதிரணியினருக்கு ஓர் அபாய வீரராகக் காட்டியிருக்கும், எதிர்கொண்டு முடக்க வேண்டிய ஒரு வீரர் என்ற செய்தியையும் அளித்திருக்கும். 69வது நிமிடத்தில் ஹெக்டர் ஹெரேரா அடித்த ஷாட், கொராடோ அடித்த ஷாட் இரண்டும் பிரேசிலினால் தடுக்கப்பட்டது.

நெய்மரைத் தேவையில்லாமல் லயுன் பந்தை எடுக்கும் போது அவருக்கு ஏற்கெனவே பாதிப்பில் உள்ள வலது கணுக்காலை மிதிக்கிறார், இதற்கு அவருக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடுவர் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டது ஆச்சரியமளித்தது, ஆட்டத்தில் இல்லாத பந்தை எடுக்கப் போகும்போது எதற்கு கால் வேலையை வீரர் மேல் காட்ட வேண்டும்?

86வது நிமிடத்தில் பிலிப் கூட்டினியோவுக்குப் பதில் ஃபர்மினோ களமிறங்கினார். 89வது நிமிடத்திலேயே ஃபர்மினோ கோல் அடித்து பிரேசில் வெற்றியை உறுதி செய்தார். மெக்சிகோ வீரர் லயூன் பந்துடைமையை இழக்க நெய்மர் பந்துடன் புகுந்தார். கில்லர்மோவை அவர் இடத்தை விட்டு முன்னேறி வரச்செய்தார், கோல் நோக்கி டோ-குத்து குத்தினார், கில்லர்மோ பந்தை டச் செய்ய முடிந்தது, ஆனால் பந்து ஃபர்மினோவுக்கு வர கோலாக மாற்றினார் பிரேசில் 2-0, காலிறுதியில் நுழைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்