இங்கிலாந்தில் வானிலை வறண்டு காணப்படுவதால் பிட்ச் ரன்கள் எடுக்கச் சாதகமாகவும் ஸ்பின் பந்து வீச்சுக்கு சற்றே சாதகம் கூடுதலாகவும் இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ், அஸ்வினைக் கண்டு இங்கிலாந்து நடுங்கி வருகிறது.
குறிப்பாக குல்தீப் யாதவ் ஒருநாள், டி20-யில் கலக்கியதையடுத்து இங்கிலாந்து அணி அவர் டெஸ்ட் போட்டிக்கு எடுக்கப்பட்டால் எப்படி சமாளிப்பது என்பதில் திக்குமுக்காடி வருகிறது.
எட்ஜ்பாஸ்டன் பிட்ச் போட்டிக்கு முன்னதாக நிறைய தண்ணீர் ஊற்றப்பட்டு ஊக்குவிக்கப்படும் என்றாலும் புறக் களம் வறண்டு காணப்படும் என்பதால் பிட்சில் ஈரப்பதம் நீடிக்காது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். பிட்ச் வறண்டும் தூசியாகவும் இருந்தால் இந்திய ஸ்பின்னர்களைச் சமாளிப்பது கடினம் என்று கூறப்பட்டாலும் பிட்ச் அப்படிப்பட்டதாக இருக்கும் என்று தோன்றவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்து வேறு வழியில்லாமல் கிளப் ஸ்பின்னர்களை நம்பி அவர்கள் மூலம் பயிற்சி பெற்று வருகிறது.
சமித் படேலின் சகோதரர் அகில் படேல், வில்லியம் பிளாக்வெல் என்ற கிளப் வீரர், அண்டர்-17 கிரிக்கெட் வீர்ரும் ரிஸ்ட் ஸ்பின்னருமான சாம் விஸ்னீவ்ஸ்கி ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு வலையில் பந்து வீசி வருகின்றனர். ஹாம்ப்ஷயர் அணியின் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாக் லின்டாட், டாம் பெஸ், ஜாக் லீச் ஆகியோரும் வலையில் சுறுசுறுப்பாக இயங்கினர்.
வறண்ட பிட்ச் என்று கூறப்பட்டாலும் அன்று பெயத மழை மீண்டும் ஈரப்பதத்தைக் கொண்டு வந்துள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன, பிட்சும் எப்போதும் போன்ற வேகப்பந்து சாதக எட்ஜ்பாஸ்டன் பிட்ச் போல்தான் காணப்படுகிறது.
மேலும் முதல் நாள் முதல் 2 மணி நேரம் பேட்டிங் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது, பிட்சும் 3 நாட்கள் வரை உடையாமல் இருக்கும் போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே குல்தீப் யாதவ் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது கடினம் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் கோலி எல்லா எதிர்பார்ப்புகளையும் முறியடிக்கும் ஒரு கேப்டன்.
ஆனால் இங்கிலாந்தின் சாதகம் என்னவெனில் பென் ஸ்டோக்ஸ் இருப்பதால் தங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கையை குறைக்காமலேயே 2 ஸ்பின்னர்களை ஆட வைக்க முடியும். இந்திய அணிக்கு இந்தச் சாதக அம்சம் இல்லை. இங்கிலாந்தின் டாப் வீரர்களில் 5 பேர் இடது கை பேட்ஸ்மெனாக இருக்க வாய்ப்பிருப்பதால் அஸ்வினுக்கு எந்த விதத்திலும் சாதகமாகிவிடக்கூடாது என்பதில் இங்கிலாந்து முனைப்பாக இருக்கும்.
பிட்சைப் பொறுத்தவரை நிச்சயம் இது ஒரு வேகப்பந்து வீச்சு சாதக எட்ஜ்பாஸ்டன் பிட்சாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்திய தொடக்க வீரர்கள், நடுக்கள வீரர்கள் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago