5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG

By செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அஸ்வின் மற்றும் கான்வே சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஷேக் ரஷீத் மற்றும் ஓவர்டன் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றனர்.

லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்க்ரம். ராகுல் திரிபாதி அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். தொடர்ந்து அன்ஷுல் காம்போஜ் வீசிய 4-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் நிக்கோலஸ் பூரன். மார்ஷ் 30 மற்றும் ஆயுஷ் படோனி 22 ரன்கள் எடுத்து வெளியேறினர். அப்துல் சமத் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்களில் 166 ரன்களை எடுத்தது லக்னோ அணி.

167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இது ஷேக் ரஷீதுக்கு முதல் ஐபிஎல் ஆட்டம். ஸ்வீட் சர்ப்ரைசாக 19 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் அடித்து அணிக்கு புதிய நம்பிக்கை ஊட்டி வெளியேறினார் ஷேக் ரஷீத். இவரது பாணி அப்படியே ருதுராஜின் பாணியை போலவே இருந்ததும் மற்றொரு ஆச்சர்யம்.

22 ரன்களில் 37 ரன்கள் அடித்து மார்க்ரம் வீசிய பந்தில் அவுட் ஆனார் ரச்சின் ரவீந்திரா. திரிபாதி 9, ஜடேஜா 7 ரன்களுடன் வெளியேறவே, அடுத்து இறங்கிய தூபே பெரிதாக அடித்து ஆடாமல் 37 பந்துகளுக்கு 43 ரன்கள் என நிதானமாக ஆடினார். விஜய் ஷங்கர் 9 ரன்களுடன் கிளம்பவே, அடுத்ததாக களமிறங்கிய தோனி அணியின் 11 பந்துகளில் 26 பந்துகள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்படி 19.3 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணிக்கு இந்த வெற்றி மிகவும் தேவையாக பார்க்கப்பட்டது. தற்போது புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசியாக 10வது இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்