மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). மும்பை வான்கடே மைதானத்தில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி வீழ்த்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 221 ரன்கள் குவித்தது. விராட் 67, கேப்டன் ரஜத் பட்டிதார் 64, ஜிதேஷ் சர்மா 40, தேவ்தத் படிக்கல் 37 ரன்கள் விளாசினர்.
222 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி போராடிய நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் விளாசினர்.
இந்த ஜோடி களத்தில் இருக்கும் வரை மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது. 34 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மிரட்டிய இந்த ஜோடியை புவனேஷ்வர் குமார் காலி செய்திருந்தார். மும்பையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன் தேவையாக இருந்த நிலையில் கிருணல் பாண்டியா பந்துவீசினார்.
முதல் பந்தை சிக்ஸரை நோக்கி மிட்செல் சாட்னர் (8) விளசினார். ஆனால் எல்லைக்கோட்டுக்கு மிக அருகே லாங் ஆஃப் திசையில் டிம் டேவிட் கேட்ச் செய்தார். அடுத்த பந்தை தீபக் சாஹர் டீப் மிட்விகெட் திசையில் சிக்ஸரை நோக்கி அடித்தார். ஆனால் அங்கு பில் சால்ட் அற்புதமாக கேட்ச் செய்த நிலையில் நிலை தடுமாறி கோட்டுக்கு வெளியே செல்ல முயன்றார்.
அப்போது அவர், பந்தை களத்துக்குள் தூக்கி எறிய அருகில் நின்ற டிம் டேவிட் கச்சிதமாக மடக்கினார். இது மும்பை அணியின் ரசிகர்களை உறையவைத்தது. அடுத்த இரு பந்துகளில் இரு ரன்கள் சேர்க்கப்பட 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் நமன் திர். கடைசி 2 பந்துகளில் சிக்ஸர்கள் விளாசினால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலையில் 5வது பந்தில் நமன் திர் (11) ஆட்டமிழந்தார். அத்துடன் மும்பை அணியின் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
போட்டிக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “இது ஒரு ரன்-திருவிழா. ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது. நான் அதைப் பற்றி எனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தேன், மீண்டும் நாங்கள் இரண்டு பெரிய ஷாட்களை அடிக்க முடியாமல் தோல்வியடைந்து உள்ளோம்.
221 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோரா? அல்லது அதற்கும் அதிகமானதா? என்பதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்களால் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் நான் பந்துவீச்சாளர்களிடம் கடுமையாக இருக்க விரும்பவில்லை. அது ஒரு கடினமான ஆடுகளம்”என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago