கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அதேவேளையில் லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ரகுவன்ஷியும் பின்வரிசையில் ரிங்கு சிங்கும் அபாரமாக செயல்பட்டனர். அஜிங்க்ய ரஹானேவும் உரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பங்களிப்பு வெளிப்படக்கூடும். அதேவேளையில் டாப் ஆர்டரில் சுனில் நரேன், குயிண்டன் டி காக் உயர்மட்ட செயல் திறனைவெளிப்படுத்தத் தவறினர்.
கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் தொடக்க ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு எதிரணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தின. ஆனால் இம்முறை தொடக்க ஜோடியிடம் இருந்து ஒருங்கிணைந்த செயல் திறன் வெளிப்படவில்லை. சுனில் நரேன், டி காக் ஜோடி இந்த சீசனில் தொடக்க விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன் 44 மட்டுமே. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் குயிண்டன் டி காக்குடன் ரகுவன்ஷி தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.
லக்னோ அணியானது தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் மிட்செல் மார்ஷின் அதிரடி பலம் சேர்க்கிறது. எய்டன் மார்க்ரமும் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. பின் வரிசையில் ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் விரைவில் ஆட்டமிழந்த நிக்கோலஸ் பூரன் மீண்டும் மட்டையை விளாசுவதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் ரிஷப் பந்த்தும் இழந்த பார்மை மீட்டெடுப்பதில் முனைப்பு காட்டக்கூடும். அவர், 4 ஆட்டங்களில் கூட்டாக 19 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
லக்னோ அணியின் பந்து வீச்சில் இளம் வீரரான திக்வேஷ் ராத்தி கவனம் ஈர்த்து வருகிறார். இம்ரான் தாஹிர் போன்ற சிகை அலங்காரம், சுனில் நரேன் போன்ற பந்து வீச்சு பாணி, கெஸ்ரிக் வில்லியம்ஸ் போன்ற ‘நோட்புக் கொண்டாட்டம்’ ஆகியவற்றால் இந்த சீசனில் பிரபலமாகி உள்ள திக்வேஷ் ராத்தி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.
இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 7.62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். லென்ந்த்தில் கட்டுப்பாடு, புத்திசாலித்தனமான வேரியேஷன் ஆகியவை திக்வேஷின் பலமாக உள்ளது. எனினும் அவரது ‘நோட்புக் கொண்டாட்டம்’ சர்ச்சையாகி உள்ளது. பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றியதும் திக்வேஷ் ராத்தி ‘நோட்புக் கொண்டாட்டத்தில்‘ ஈடுபட்டார். இதனால் அவருக்கு இரு முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அவர், அபராதத்தை பெற்றால் ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்கான தடையை எதிர்கொள்ளக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago