புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் சிஎஸ்கே | IPL 2025

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

நடப்பு சீசனில் 18 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 10 ஐபிஎல் அணிகளும் குறைந்தது மூன்று ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் 6 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்.

1.டெல்லி கேப்பிடலஸ் - மூன்று ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி, மூன்றிலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 1.257 என உள்ளது.

2.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரண்டு ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆர்சிபி, இரண்டு வெற்றி மாற்று ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 1.149.

3.குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, 3 ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று, பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.807.

4.பஞ்சாப் கிங்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 3 ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று, பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் 0.074 என்ற அடிப்படையில் அந்த அணி நான்காம் இடத்தில் உள்ளது.

5.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நான்கு ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது கொல்கத்தா.

6.லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பந்த் தலைமையிலான லக்னோ அணி நான்கு ஆட்டங்களில் தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை தழுவி உள்ளது. 4 புள்ளிகளுடன் அந்த அணி 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.048.

7.ராஜஸ்தான் ராயல்ஸ் - 4 ஆட்டங்களில் இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்வி என 4 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் உள்ளது ராஜஸ்தான். அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.048.

8.மும்பை இந்தியன்ஸ் - 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 8-வது இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.108 என உள்ளது.

9.சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பதிவு செய்துள்ளது ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி அணிகள் உடன் அடுத்தடுத்து தோல்விகளை தழுவி 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.891.

10.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி, மூன்று தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ஹைதராபாத். 10 அணிகளில் டெல்லி அணி மட்டுமே 6 புள்ளிகளை பெற்றுள்ளது. பட்டியலில் இரண்டு முதல் ஏழாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி வரை 4 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் மாறுபாடு காரணமாக பட்டியலில் பிடித்துள்ள இடங்கள் வேறுபடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இது ஏப்.5-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு பிறகான புள்ளிப்பட்டியலின் அப்டேட். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்