மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடும் இந்​திய அணி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்த ஆண்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா விளையாடுகிறது.

நடப்​பாண்​டில் இந்​திய கிரிக்​கெட் அணி பங்​கேற்​கும் போட்​டிகள் தொடர்​பான விவரங்​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) நேற்று அறி​வித்​தது.

அதன்​படி அக்​டோபரில் இந்​தி​யா​வுக்கு வரும் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, இந்​தி​யா​வுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளையாட உள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி அகம​தா​பாத்​தில் அக். 2-ம் தேதியும், 2-வது போட்டி கொல்​கத்​தா​வில் அக்​டோபர் 10-ம் தேதி​யும் தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்​து, தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்ய உள்​ளது.

இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டெல்​லி​யில் நவம்​பர் 14-ம் தேதியும், 2-வது போட்டி குவாஹாட்​டி​யில் நவம்​பர் 22-ம் தேதியும் தொடங்க உள்ளது.

நவம்​பர் 30-ம் தேதி, 3 ஆட்​டங்​கள் கொண்ட சர்​வ​தேச ஒரு நாள் போட்​டித் தொடர் தொடங்​கு​கிறது. ராஞ்​சி​யில் நவம்​பர் 30-ம் தேதி முதல் ஆட்​ட​மும், ராய்ப்​பூரில் டிசம்​பர் 3-ம் தேதி 2-வது ஆட்​ட​மும், டிசம்​பர் 6-ம் தேதி விசாகப்​பட்​டினத்​தில் 3-வது ஆட்​ட​மும் நடை​பெறவுள்​ளது. இதைத் தொடர்ந்து 5 சர்​வ​தேச டி20 ஆட்​டங்​களில் இரு அணி​களும் பங்​கேற்​க​வுள்​ளன.

முதலா​வது டி20 போட்டி டிச.9-ம் தேதி கட்​டாக்​கிலும், 2-வது டி20 போட்டி டிசம்​பர் 11-ல் புதிய சண்​டிகரிலும், 3-வது டி20 போட்டி டிசம்​பர் 14-ம் தேதி தரம்​சாலா​விலும், 4-வது டி20 போட்டி டிசம்​பர் 17-ம் தேதி லக்​னோ​விலும், 5-வது டி20 போட்டி டிசம்​பர்​ 19-ம்​ தேதி அகம​தா​பாத்​தி​லும்​ நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்