மும்பை: மும்பை அணிக்கு மீண்டும் கோப்பையை வென்று தருவதே எங்களது இலக்காக உள்ளது என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. வரும் 4-ம் தேதி மும்பை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் நான் நடுவரிசையில் களமிறங்கி விளையாடினேன். இப்போது, தொடக்க வீரராக இருக்கிறேன். முதலில் நான் கேப்டனாக இருந்தேன். இப்போது, கேப்டனாக இல்லை. நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எங்களது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.
எனவே, வீரர்களின் பங்கு வீரர், பயிற்சியாளர் என மாறிவிட்டது. ஆனால், வீரர்களின் மனநிலை அப்படியேதான் உள்ளது. இந்த அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை. ஆட்டங்களையும் கோப்பைகளையும் வெல்வதே அது.
அதற்காகவே மும்பை இந்தியன்ஸ் பெயர் பெற்றது. பல ஆண்டுகளாக, நாங்கள் கோப்பைகளை வென்றுள்ளோம். யாரும் நம்பாத சூழ்நிலைகளில் இருந்து ஆட்டங்களை மாற்றியமைத்து வெற்றி கண்டுள்ளோம்.
» 2-வது வெற்றியைப் பெறப் போவது யார்? கொல்கத்தா - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை
» சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குழந்தைகளுடன் உரையாடினார்
எங்கள் அணியில் உள்ள பல இளம் வீரர்களும் சிறந்த திறமைகளை கொண்டுள்ளனர். அவர்களுடன் விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். டாடா ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் பெருமையைக் கொண்டு வருவதே எனது இலக்காக உள்ளது.
இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago