சென்னை: ஆடுகளத்துக்குள் எந்த ஓவரில் விளையாட வருவது என்ற முடிவை எம்.எஸ்.தோனி மட்டுமே எடுக்கிறார் என்று சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சிஎஸ்கே அணியின் மிகச்சிறந்த ஃபினிஷர் என்று பெயரெடுத்த எம்.எஸ். தோனி, இந்த ஆட்டத்தில் 11 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வீழ்ந்தார்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிரான போட்டியின்போது தோனி 9-ம் வரிசையில் களம் இறங்கினார். இது அப்போது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் போட்டியின்போது தோனி, 7-வது வீரராக களம் புகுந்தார். இருந்தபோதிலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் தோனி.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: தோனியின் பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்ததாக உள்ளது. இது குறித்த முடிவை தோனிதான் எடுக்கிறார். ஆடுகளத்துக்குள் எப்போது வருவது என்பதை அவரே முடிவு செய்கிறார்.
அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில பிரச்சினைகள் உள்ளன. அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்பட்டு வருகிறார் என்றுதான் நான் கூறுவேன். இன்றைய போட்டி போல, ஆட்டம் சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்னதாகவே பேட்டிங் செய்ய ஆடுகளத்துக்குள் வருவார். இதனால், மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு
கிடைக்கும்.
இது தொடர்பாக நான் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தேன். எம்.எஸ். தோனி எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார்.
இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago