இந்தி மொழி வர்ணனையின் தரம் குறித்து எழுந்த விமர்சனம்: பின்னணி என்ன? - IPL 2025

By எல்லுச்சாமி கார்த்திக்

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஆட்டங்கள் அனைத்தும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்தில் தமிழ் உட்பட 12 மொழிகளில் வர்ணனை செய்யப்படுகிறது. இதில் இந்தி மொழி வர்ணனையும் அடங்கும். இந்நிலையில், இந்தி மொழி வர்ணனையின் தரம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனின் தொலைக்காட்சி வர்ணனையை பொறுத்தவரையில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கை பொறுத்தவரையில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ஹரியான்வி, பெங்காலி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ‘போஜ்புரி மொழியில் போட்டியின் வர்ணனையை கேட்பது தனக்கு தனது பள்ளி கால வானொலி வர்ணனையை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது’ என கூறியிருந்தார்.

பார்வையாளர்கள், ரசிகர்ளுக்கு தங்கள் தாய் மொழியில் கிரிக்கெட் வர்ணனையை கேட்பது தனித்துவமான அனுபவம். இந்த நிலையில்தான் இந்தி மொழி வர்ணனையின் தரம் குறித்து பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்தி மொழி வர்ணனையாளர்கள் யார், யார்? - சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, முகமது கைஃப், பியூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சஞ்சய் பங்கர், வருண் ஆரோன், சுனில் கவாஸ்கர், ஜதின் பாங்கர், வருண் ஆரோன், சுனில் கவாஸ்கர், அஜய் ஜடேஜா, தாஸ்குப்தா, ஆகாஷ் சோப்ரா.

ரசிகரின் விமர்சனம்: “கடந்த காலங்களில் மனிந்தர் சிங் மற்றும் அருண் லால் போன்றவர்களின் இந்தி வர்ணனைகள் கிரிக்கெட் விளையாட்டு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அதிகம் தருவதாக இருந்தது. ஆனால், இப்போது வர்ணனையாளர்கள் கேலி பேசும் வகையிலான ஒன் லைனர்கள் அடிப்பதில் நாட்டம் செலுத்துகின்றனர். இது பார்வையாளர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டோடு இணைவதை சவாலானதாக மாற்றுகிறது” என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.

‘தங்கள் தகவலுக்கு நன்றி. நாங்கள் இதை கவனத்துக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என இந்தி மொழி வர்ணனையாளர்களில் ஒருவராக உள்ள ஹர்பஜன் சிங் அதற்கு பதில் அளித்துள்ளார்.

ஹர்பஜன் நிற பேத சர்ச்சை: நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 76 ரன்களை கொடுத்திருந்தார் ராஜஸ்தான் பந்து வீச்சாளர் ஆர்ச்சர். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பவுலர் ஒருவர் கொடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

அப்போது போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “லண்டனின் கருப்பு நிற டாக்சிகளின் மீட்டரைப் போலவே, ஆர்ச்சரின் ரன் மீட்டரும் உயர்ந்து உள்ளது” என்றார். அவரது இந்த கருத்தை தொடர்ந்து ‘ஹர்பஜன் மன்னிப்பு கோர வேண்டும்’ என சமூக வலைதள பதிவுகளின் மூலம் நெட்டிசன்கள் வலியுறுத்தினர். இருப்பினும் அதற்கு ஹர்பஜன் பதில் தரவில்லை.

கன்னட பாடல் இல்லையா? - நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்க விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பாடகர் ஸ்ரேயா கோஷல் பங்கேற்று பாடல் பாடியிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 10 அணிகளுக்கும் அந்தந்த அணிகள் சார்ந்துள்ள பிராந்திய மொழிகளில் பாடல் பாடி அவர் அறிமுகம் செய்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தி பாடலை பாடியதாக தகவல். அதையடுத்து ஆர்சிபி ரசிகர்கள் ‘ஏன் கன்னட பாடல் பாடவில்லை?’ என கேள்வி எழுப்பி இருந்தனர். இது சமூக வலைதளத்தில் விவாதமானது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் வர்ணனை பல்வேறு மொழிகளில் கிடைத்தாலும் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்