ஷாருக் முதல் திஷா பதானி வரை: கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் 2025 சீசன்!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் வீரர்கள் மட்டுமல்லாது நடிகர் ஷாருக்கான், பாடகர் ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி என பாலிவுட் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.

வண்ணமயமான ஒளிவிளக்குகளின் மாயாஜாலம் மற்றும் பட்டாசுகள் வாணவேடிக்கை உடன் முதல் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ‘உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் நிகழ்வு’ என ஐபிஎல் கிரிக்கெட்டை ஷாருக்கான் தெரிவித்தார். அவர் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் இன்று காலை மழை பொழிவு இருந்த நிலையில் மாலையில் அது விலகிய சூழலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

பாடகர் ஸ்ரேயா கோஷல் தனது ஹிட் பாடல்களை பாடி அசத்தினார். குறிப்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் அனைவரையும் ஈர்த்தது. கரண் அவுஜ்லா தனது பஞ்சாபி பாடல்களை பாடி அசத்தினார். திஷா பதானி நளினம் பொங்க நடனமாடி ரசிகர்களை ஈர்த்தார். அனைத்துக்கும் மேலாக ‘கிரிக்கெட் உலகின் அரசன்’ என கோலியை குறிப்பிட்டார் ஷாருக்கான். அவர்கள் இருவரும் மேடையில் இணைந்து நடனமாடி இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்