‘அஷ் கி பாத்’ என்ற தனது யூடியூப் சேனலில் நடந்த உரையாடலின்போது ஐபிஎல் 2025 தொடரில் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாகச் செயல்பட்டால் டெஸ்ட் போட்டிகளுக்கு நிச்சயம் திரும்பலாம் என்று ஒருவர் கூற, அஸ்வின் அதனைக் கடுமையாக மறுத்தார்.
ஐபிஎல் ஃபார்ம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைய போதாது என்று அஸ்வின் நம்பலாம். ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஏன் பவுலிங்கில் கூட ஐபிஎல் ஆட்டத்தின் ஜொலிப்புதான் இந்திய டெஸ்ட் அணியில் நுழைய ஏதுவாக உள்ளது போல் தெரிகிறது.
ஸ்ரேயஸ் அய்யர் 2023 ஐசிசி உலகக் கோப்பை முதல் தற்போது சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் வரை பிரமாதமாக 4-ம் நிலையில் வெளுத்துக் கட்டி வருகிறார். அவரது பேட்டிங்கில் தன்னம்பிக்கைக் கூடியுள்ளது, ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தாதா, ஆனால் வேகப்பந்து வீச்சில் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துக்கு அவருக்கிருந்த பலவீனத்தை அவர் வென்றெடுத்து விட்டார் என்றே தெரிகிறது.
ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபியில் அவருக்கு ஷார்ட் பிட்ச் எகிறு பந்து வீசியபோதெல்லாம் தைரியமாக ஃபுல், ஹூக் என்று ஆடி பவுண்டரிக்கு விரட்டியதைப் பார்த்தோம். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களைக் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.
இனி அவருக்கு பிசிசிஐ-யின் வீர்ர்கள் ஒப்பந்தத்தில் மத்திய ஒப்பந்தம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது, இதனையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விரைவில் நுழைவார் ஸ்ரேயஸ் அய்யர் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், அஸ்வின் யூடியூப் சேனலில் நடந்த உரையாடலில் ஒருவர், ‘ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஸ்ரேயஸ் அய்யர் நன்றாக ஆடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மீண்டும் நுழைய வாய்ப்புள்ளது’ என்றார்.
இதனை உரையாடலின்போது மறுத்த அஸ்வின், “ஒரு விஷயத்தை எனக்குச் சொல்லுங்கள்: ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் டெஸ்ட் அணிக்கு அழைப்பு வரும் என்பது எப்படி? ஐபிஎல் நன்றாக ஆடுகிறார் என்று வைத்துக் கொண்டாலும், அது எப்படி டெஸ்ட் போட்டியில் அழைப்பதற்கான திறமைகளை அடைந்து விட்டதாக அமையும்?
ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் இந்திய டி20 அணிக்கு வேண்டுமானால் திரும்பலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவர் நன்றாக ஆடினால் டி20 தொடருக்கும் திரும்புவதைப் பற்றி பேசுகிறார்கள். இவையெல்லாம் தவறு. ஐபிஎல் நன்றாக ஆடினால் வீரரின் டி20 திறமைகள் மேம்பட்டதாகவே அர்த்தம்” என்று அஸ்வின் மறுத்துக் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago