‘ஐபிஎல்லை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்’ - இன்சமாம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட்டை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கும் வகையில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.

வரும் 22-ம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் உலக அளவில் நடைபெறும் விளையாட்டு தொடர்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கமிக்கும் களமாக ஐபிஎல் உள்ளது. இந்த நிலையில் இன்சமாம் அது குறித்து பேசியுள்ளார்.

“உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடுகின்றனர். ஆனால், மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இல்லை. அதனால் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லாத போது அதையே தான் மற்ற நாட்டு வாரியங்களும் செய்ய வேண்டும்.” என இன்சமாம் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகே பிற நாடுகள் நடத்தும் லீக் கிரிக்கெட் தொடர்களில் தற்போது பங்கேற்க முடியும். அந்த வகையில் ஓய்வு பெற்ற பிறகே இந்திய வீரர்களான யுவராஜ் சிங், இர்பான் பதான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாடினர். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும் அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இந்த முறை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்