ஆன்டிகுவாவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேசம் அணி 43 ரன்களில் சுருண்டது.
141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மிகக்குறைந்த அளவு ரன்களுக்கும், ஓவர்களுக்கும் ஒரு அணி ஆட்டமிழந்திருக்கிறது என்றால் அது வங்கதேசம்தான்.
துல்லியமாகவும், வேகத்தோடும் பந்துவீசிய கீமர் ரோச் 12 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போட்டி தொடங்கி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது பரிதாபமாகும்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்துள்ளது. பிராத்வெய்ட் 88 ரன்களுடனும், பாவெல் 48 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஸ்மித் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. தமிம் இக்பால், லிட்டன் தாஸ் களமிறங்கினார்கள். கீமிர ரோச் வீசிய 5-வது ஓவரில் 4 ரன்கள் சேர்த்திருந்த இக்பால் ஆட்டமிழந்தார். அதன்பின் வரிசையாக விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கின.
ரோச் வீசிய 7-வது ஓவரில் மோமினுல் ஹக் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 9-வது ஓவரில் ரோச்சின் அதிவேகத்துக்கு நல்ல பலன் கிடைத்து. அந்த ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. முஸ்பிகுர் ரஹீம், சஹிப் அல் ஹசன், முகமதுல்லா ஆகிய 3 வீரர்களும் டக்அவுட்டில் வெளியேறினார்கள்.
அதன்பின் நீண்டநேரம் நிலைக்காத வங்கதேச பேட்ஸ்மேன்கள், கம்மின்ஸ், ஹோல்டர் பந்துவீச்சுக்கு இரையானார்கள். இந்த போட்டியில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் மட்டுமே இரட்டை இலக்கத்தில்(25) ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலும், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். 4 பேட்ஸ்மேன்கள் டக்அவுட்டில் வெளியேறினார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்கு வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் கீமர் ரோச் 5 ஓவர்கள் வீசிய ஒருமெய்டன் உள்பட 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 141 ஆண்டுக்கால வரலாற்றில் 18.4 ஓவர்களில், 43 ரன்களுக்கு சுருண்ட முதல் அணி வங்கதேசம்தான். மேற்கிந்தியத்தீவுகளில் டெஸ்ட் போட்டியில் எடுக்கப்பட்ட மிகக்குறைந்தபட்ச ரன்களாகும். மேலும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ரன்களாகும்.
இதற்குமுன்…..
இதற்கு முன் கடந்த 1974-ம் ஆண்டு இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 42 ரன்களில் சுருண்டது. அதுதான் குறைந்தபட்சமாக இருந்து வருகிறது.
இந்திய அணிக்குபின், 44 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் மிகக்குறைந்த ஸ்கோரில் சுருண்டதும் வங்கதேசம் அணிதான்.
இதற்கு முன், கடந்த 2007-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 62 ரன்களில் வங்கதேசம் சுருண்டிருந்தது. மேலும், மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில் எடுக்கப்பட்ட மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் கடந்த 1994-ம் ஆண்டு போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 46 ரன்களுக்கு மேற்கிந்தியத்தீவுகளிடம் ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கீமர் ரோச் சாதனை…
மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் இந்தப் போட்டியில் 12பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கு முன் 12 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர் மான்டி நோபிள், தென் ஆப்பிரிக்க வீரர் ஜேக்ஸ் காலிஸ் மட்டுமே இருந்தனர். அந்தப்பட்டியலில் கீமர் ரோச் இணைந்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ், இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் 13 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago