மும்பை: ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான் இணைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் 5 முறை பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. இறுதி போட்டிக்கு வந்த 5 முறையும் அந்த அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22-ல் தொடங்கவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முஜிப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜிப் உர் ரஹ்மான் 19 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago