ஜோகன்னஸ்பர்க்: எஸ்ஏ டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏடி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஜோகன்னஸ்பர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய டர்பன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹென்ரிச் கிளாசன் 76, வியான் முல்டர் 30, பிரீட்ஸ்க் 23, குயிண்டன் டி காக் 16 ரன்கள் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடத் தொடங்கியது. இடையில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி 16 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் ஜோபர்க் அணி 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இதையடுத்து டிஎல்எஸ் முறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
» மத்திய அரசின் பட்ஜெட் மாநிலங்களுக்கிடையே பாகுபாடுகளை உருவாக்கும்: திருமாவளவன், சீமான் கண்டனம்
» டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதி
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் டோனவன் பெரைரா 51, டூ பிளெஸ்ஸிஸ் 14, டேவன் கான்வே 21 ரன்கள் எடுத்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago