6 ரன்னில் போல்டானார் விராட் கோலி

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அணிக்கு 234 ரன்கள் இலக்கு

ஜாம்ஷெட்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் 185 ரன்களிலும், தமிழ்நாடு 106 ரன்களிலும் ஆட்டமிழந்தது. 79 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜார்க்கண்ட் அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 48.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுதது 234 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழ்நாடு அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. முகமது அலி 44, நாராயண் ஜெகதீசன் 13, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 13, ஆந்த்ரே சித்தார்த் 18, சாய் கிஷோர் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் 33, அஜித் ராம் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அணி.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - டோகோ இன்று மோதல்

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 1 பிளே ஆஃப் சுற்றில் இந்தியா, டோகோ அணியுடன் டெல்லியில் இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் வரும் செப்டம்பரில் நடைபெறும் உலக குரூப் 1 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன் ஆகியோரும் இரட்டையர் பிரிவில் ரித்விக் சவுத்ரி போலிபாலி, ராம் பாலாஜி ஜோடியும் களமிறங்குகிறது.
ஒற்றையர் பிரிவு ஆட்டம் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சசிகுமார் முகுந்த், டோகோ வீரர் லியோவா ஆயிடே அஜவோனுடன் மோதுகிறார். ராம் குமார் ராமநாதன், தாமஸ் செடோட்ஜியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இரட்டையர் பிரிவு ஆட்டமும், மாற்று ஒற்றையர் ஆட்டமும் நாளை (2-ம் தேதி) நடைபெறுகிறது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி போலிபாலி, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, தாமஸ் ஸ்டியோட்ஜி, ஹோட்'அபாலோ ஐசக் பாடியோ ஜோடியை எதிர்கொள்கிறது.

6 ரன்னில் போல்டானார் விராட் கோலி

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிடல் டெல்லி - ரயில்வே அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ரயில்வே அணி முதல் இன்னிங்ஸில் 67.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 96 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.

13 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி கோப்பையில் களமிறங்கிய விராட் கோலி 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹிமான்ஷு சங்கவான் பந்தில் போல்டானார். கேப்டன் ஆயுஷ் பதோனி 99, சுமித் மாத்தூர் 78, பிரணவ் ராஜ்வன்ஷி 39 ரன்கள் சேர்த்தனர். 93 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள டெல்லி அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்