துபாய்: 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி.
31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பும்ரா கடந்த ஆண்டு விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இது தவிர கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
ஸ்மிருதி மந்தனா: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2024-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா தேர்வாகி உள்ளார். அவர், கடந்த ஆண்டில் 13 போட்டிகளில் 747 ரன்கள் குவித்திருந்தார்.
அஸ்மதுல்லா ஓமர்ஸாய்: ஆடவருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2024-ம் ஆண்டின் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தேர்வாகி உள்ளார். கடந்த ஆண்டில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர், 417 ரன்களையும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago