மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜம்மு & காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள எம்சிஏ-பிகேசி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அஜிங்க்ய ரஹானே தொடர்கிறார்.
சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதன் காரணமாக ரோஹித் சர்மா, பார்மை மீட்டெடுக்கும் விதமாக ரஞ்சி கோப்பையில் களமிறங்குகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago