டேனியல் மேத்வதேவுக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் டென்னிஸ் ராக்கெட் உடைத்ததற்காக ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் மேத்வதேவ், தாய்லாந்தின் காசிடிட் சாம்ராஜே வீழ்த்தினார். அப்போது வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை மைதானத்தில் போட்டு உடைத்தார் மேத்வதேவ்.

இதைத் தொடர்ந்து 2-வது சுற்று ஆட்டத்தில் மேத்வதேவ், தோல்வி நிலையில் இருந்தபோது தனது டென்னிஸ் ராக்கெட்டை மைதானத்தில் தூக்கி வீசினார். இதையடுத்து விதிகளை மீறி நடந்துகொண்ட மேத்வதேவுக்கு மொத்தம் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.65.7 லட்சம்) அபராதத்தை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அமைப்பாளர்கள் விதித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்