வரவிருக்கும் ரஞ்சி டிராபி முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் ஆடப்போவது உறுதியான நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சொதப்பினாலும் ஓய்வு அறிவிக்க மனம் வராத விராட் கோலி தன் ஃபார்மை மேம்படுத்திக் கொள்ள டெல்லி அணிக்காக ஆடுவார் என்று உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், கோலி இன்னமும் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகமே நீடிக்கிறது.
அவர் லண்டனுக்குச் சென்று விட்டார். அவர் இனி இங்கு வந்து உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. விராட் கோலி கடைசியாக டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் 2012-ம் ஆண்டு ஆடியதோடு சரி. உள்நாட்டுக் கிரிக்கெட்டையே ஏறக்கட்டி விட்டார்.
டிடிசிஏ செயலர் அசோக் சர்மா இது தொடர்பாகக் கூறும்போது, “உத்தேச வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரைச் சேர்த்திருந்தோம், இதில் பண்ட் ஆடுவதாக உறுதியளித்துள்ளார், விராட் கோலியிடம் இருந்து இன்னும் எந்த ஒரு செய்தியும் வரவில்லை” என்றார். ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆடவிருப்பதால் அவர் ரஞ்சியில் ஆட மாட்டார்.
உள்நாட்டில் நியூஸிலாந்துக்கு எதிராக 0-3 என்று உதைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சென்று 1-3 என்று தோல்வியடைந்தது. பும்ராவின் ஒன் மேன் ஷோவாகிப் போன தொடருக்குப் பிறகே கோலி, ரோஹித் சர்மா உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பிசிசிஐ அணித் தேர்வாளர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வர்த்தக நோக்கங்களுக்காக ரோஹித், கோலி இருவரையும் தேர்வு செய்வதால்தான் இது நடக்கிறது. அந்தத் தொடரில் இவர்கள் இல்லை என்றால் நிச்சயம் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டு இருப்பார்கள். இப்போது இங்கிலாந்து தொடர் ஒரு சாக்குப் போக்காகி விடுகிறது.
ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரஞ்சி டிராபியில் ஆடவிருக்கின்றனர். ஒன்று விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிக்க வேண்டும் இல்லையெனில் டெஸ்ட் அணியில் நீடிக்க வேண்டும். உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடுவது மட்டும் போதாது, அங்கு நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் தேர்வு சாத்தியம் என்ற நடைமுறையை கண்டிப்பாக்கினால்தான் இந்திய கிரிக்கெட் ஸ்டார்களின் அலட்சியப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
வேகப்பந்து வீச்சில் மட்டும்தான் முன்பெல்லாம் அயல்நாட்டில் திணறி வந்தார்கள். இப்போது உள்நாடு, அயல்நாடு இரண்டிலுமே வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பந்து வீச்சு இரண்டிலுமே சொதப்பி வருகிறார்கள். எனவே, ஐபிஎல் போட்டிகளை செலக்ஷன் அளவுகோலில் இருந்து தூக்கி எறிந்து உள்நாட்டுக் கிரிக்கெட் பெர்ஃபார்மன்ஸை அளவு கோலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago