யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டுவதிலும் அறிவற்ற ஆத்திரத்தையும் வசையையும் பொழிபவர் என்பதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட உதாரணங்கள் உள்ள நிலையில், தன் மகன் யுவராஜ் சிங், கபில் தேவை விட சிறந்த வீரர் என்று கபில்தேவுக்கே பேப்பர் கட்டிங்கை அனுப்பி தெரிவித்ததாக இப்போது தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு யோக்ராஜ் சிங், “கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே நேரத்தில் வடக்கு மண்டலம், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்தவித காரணமும் இல்லாமல் அணியில் இருந்து என்னை நீக்கினார். இதையடுத்து கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று எனது மனைவியிடம் கூறினேன். உடனடியாக என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கபில்தேவ் வீட்டுக்கு சென்றேன். அப்போது கபில், அவரது அம்மாவுடன் வெளியே வந்தார்.
அப்போது கபில்தேவை திட்டி தீர்த்தேன். உன்னால் நான் என் நண்பன் ஒருவனை இழந்தேன், உன்னை சும்மா விட மாட்டேன். உன் தலையில் சுடுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்தேன். ஆனால், உனக்கு பாசமான அம்மா இருக்கிறார். இதனால் உன்னை சுடவில்லை என்று கூறினேன்.” என்று கூறியதாக அவர் சொன்ன செய்தி வைரலானது.
இந்நிலையில், யோக்ராஜ் சிங் கூறியது பற்றி கபில் தேவிடம் கேட்ட போது, “யார் அவர்? யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்?” என்று கேட்க செய்தியாளர்கள் அவர்தான் யோக்ராஜ் சிங், யுவராஜ் சிங்கின் தந்தை என்று கபிலிடம் கூற கண்டு கொள்ளாத கபில், “வேற ஏதாவது இருக்கா?” என்று கேட்டு கேள்வியைப் புறக்கணித்தார்.
இதற்கிடையே யோக்ராஜ் சிங் மீண்டும் தான் செய்த ஒரு காரியம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது தான் கபிலிடம் பேசி வருடக் கணக்காகி விட்டது என்றும் “2011 உலகக் கோப்பையை வென்ற போது ஒரு நபர் உணர்ச்சி வசப்பட்டு அழுதார், அவர் கபில்தேவ். ‘என் மகன் யுவராஜ் சிங், உலகக் கோப்பையில் உன்னை விடவும் நன்றாக ஆடி விட்டான்’ என்று செய்தித்தாள் கட்டிங்கை அனுப்பினேன்” என்று கூறியுள்ளார்.
தனது இந்த காரியத்திற்கு கபில் வாட்ஸ் அப்பில் பதில் அளித்ததையும் யோக்ராஜ் சிங் தெரிவித்தார், அதில் “கபில் எனக்கு வாட்ஸ் அப்பில் ‘அடுத்த ஜென்மத்தில் நாம் இருவரும் சகோதரர்களாகப் பிறப்போம், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக பிறப்போம்’ என்று செய்தி அனுப்பினார். ஆனால், பழிதீர்க்கும் எண்ணம் இன்னும் இருக்கிறது. அதுதான் காயப்படுத்துகிறது” என்று யோக்ராஜ் சிங் இப்போது தெரிவித்துள்ளார். யோக்ராஜ் சிங் இதே போல் தோனியை விட்டேனா பார் என்று வசை பாடியதும் நாம் அறிந்ததே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago