“கிரிக்கெட்டே தெரியாது... நாங்க காசுக்காக கூவுறவங்க தானே!” - கவாஸ்கர் புலம்பல்

By ஆர்.முத்துக்குமார்

பார்டர் - கவாஸ்கர் டிராபியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வசம் கையளித்த இந்திய அணியை சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடி வருகிறார். அனைத்துக்கும் மேலாக வர்ணனையில் விமர்சனம் செய்யும் முன்னாள் வீரர்களை இப்போது ஆடும் மூத்த வீரர்கள் ‘அவுட்சைட் நாய்ஸ்’ (outside noise), என்றும் ‘அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள்’ என்றும் அராஜகமாகப் பேசி வரும் கேப்டன்கள், மூத்த வீரர்களுக்கு கவாஸ்கர் சாட்டையடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் திட்டமென்ன என்று கேட்டபோது கவாஸ்கர் தன் சாட்டையடி கிண்டல் தொனியில், “அரே! எங்களுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும்? எங்களுக்கெல்லாம் கிரிக்கெட் தெரியாது. நாங்கள் டெலிவிஷனில் காசுக்காக பேசி வருகிறோம். எங்களின் அறிவுரையெல்லாம் யார் கேட்கிறார்கள்? நானும், இர்பான் பதானும் டிவியில் சும்மா அரட்டையடித்தோம். எங்கள் விமர்சனங்களுக்குக் காது கொடுப்பவர்கள் யாரும் இல்லை. நாங்கள் கூறுவதெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடட்டும்.

இந்திய அணியின் பயிற்சிக் குழு ஆஸ்திரேலியாவில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். உங்கள் பவுலிங் கோச் (மோர்கெல்), பேட்டிங் கோச் (அபிஷேக் நாயர்) என்ன செய்து கொண்டிருந்தார்கள்? குறிப்பாக உங்கள் பேட்டிங் கோச் நியூஸிலாந்துக்கு எதிராக 46 ஆல் அவுட் ஆன போது என்ன செய்து கொண்டிருந்தார்? இதோடு தொடரையும் இழந்தோம், இப்போது பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் பேட்டிங் கோச் என்ன செய்து கொண்டிருந்தார்?

பேட்டிங்கில் ஒரு ‘பஞ்ச்’ கூட இல்லை. இங்கும் பேட்டிங் சொதப்பல், ஆகவே பயிற்சியாளர் என்ன செய்து கொண்டுள்ளார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். ஏன் மேம்பாடு இல்லை? வரும் ஜனவரி 23-ம் தேதி ரஞ்சி டிராபி போட்டிகள் தொடங்குகின்றன. இப்போது அணியில் இருக்கும் எத்தனை வீரர்கள் ரஞ்சியில் ஆடுகிறார்கள் என்று பார்ப்போம். விளையாட முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவில்லையா? கவுதம் கம்பீர் சிலபல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். பயிற்சிக் குழுவை மீண்டும் கேட்கிறேன். பேட்டிங்கை மேம்படுத்த என்ன செய்தீர்கள்? இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங்கை இம்ப்ரூவ் செய்ய என்ன செய்தீர்கள்? வெறுமனே த்ரோ டவுன்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. டெக்னிக், பொறுமையாக ஆடுவதில் மேம்பாடு இல்லையே ஏன்? அதை நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை.

ரன்கள் எடுக்காத பேட்டர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள். அதேபோல் பயிற்சியாளர்களையும் ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேளுங்கள்.” என்று கவாஸ்கர் புலம்பித் தள்ளியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்