இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
> ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணி 10 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் வென்றுள்ளது. கடைசி இரு தொடர்களையும் அந்த அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவிடம் இழந்திருந்தது.
> இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாட உள்ளது.
> தொடரை இழந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறி உள்ளது. தொடர்ச்சியாக இரு முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்த நிலையில் தற்போது முதன்முறையாக தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது.
» என்டிஏ கூட்டணியில் மீண்டும் அதிமுக..? - வானதி சீனிவாசன் பளிச்
» ‘யார் அந்த சார்’ என்று கேள்வி எழுப்பினால் தமிழக அரசு பதற்றம் அடைவது ஏன்? - இபிஎஸ்
> தொடர் நாயகனாக இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வானார். அவர். இந்த தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் தேர்வானார். அவர், இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 10 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
ஏமாற்றம் அளிக்கிறது: இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறும்போது, “கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது, ஆனால் சில நேரங்களில் நீங்கள் உங்கள் உடலை மதிக்க வேண்டும், உங்கள் உடலை எதிர்த்துப் போராட முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.
‘பும்ரா இல்லாதது சாதகம்’ - இந்திய அணியில் பும்ரா இல்லாவிட்டால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றிருக்கும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் நிரூபணமானது. காயம் காரணமாக பும்ரா பந்து வீசாததால் ஆஸ்திரேலிய அணி எந்தவித அழுத்தமும் இல்லாமல் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை சேர்த்து எளிதாக வெற்றி பெற்றது.
> போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் பும்ரா பந்து வீசும்போது தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். எனவே அவர், இல்லாதது நாங்கள் இலக்கை துரத்துவதற்கு சிறிது உதவியது என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
9 வீரர்களும்... 74 ரன்களும்… சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 61, ஜெய்ஸ்வால் 22 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அணியில் உள்ள மற்ற 9 பேட்ஸ்மேன்களும் கூட்டாக 74 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
> 200-ஐ தாண்டவில்லை… ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 6 இன்னிங்ஸ்களில் 200 ரன்களை கூட எட்ட முடியாமல் ஆட்டமிழந்துள்ளது.
ஜெய்ஸ்வால் 391: இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலிய அணி தொடரில் 391 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சதம், 2 அரை சதம் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக நித்திஷ் குமார் ரெட்டி 298 ரன்களும், கே.எல்.ராகுல் 276 ரன்களும், ரிஷப் பந்த் 255 ரன்களும் சேர்த்தனர்.
தேறாத சுழல்: இந்திய அணியில் பும்ராவை தவிர மற்ற பந்து வீச்சாளர்களின் செயல் திறன் கேள்விக்குறியாக மாறியுள்ளது. முகமது சிராஜ் 36 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். சர்வதேச அரங்கில் இது சிறப்பானதாக இல்லை. ஆகாஷ் தீப் பந்து வீச்சு இன்னும் ஒழுங்கமைப்படவில்லை.
பிரசித் கிருஷ்ணா பந்தை ஸ்விங் செய்கிறார், அழுத்தம் கொடுக்கிறார். எனினும் அவர், 2 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். ஹர்ஷித் ராணா இன்னும் உயர்மட்ட அளவிலான போட்டிகளுக்கு தயாராகவில்லை என்பதையே ஆஸ்திரேலிய தொடர் காட்டியுள்ளது. அவர், உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடி திறனை மேம்படுத்த வேண்டும்.
சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இவர்கள் இருவரும் பேட்டிங்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் அதிலும் முழுமையான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.
நித்திஷ் ரெட்டியின் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் போது அவர், திறனை வளர்த்துக்கொள்ளக்கூடும்.
ரோஹித், கோலி நிலை? - ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த 2 ஆண்டு சுழற்சியில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக வரும் ஜூன் மாதம் விளையாடுகிறது. அதற்குள் இந்திய டெஸ்ட் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கக்கூடும். அணியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடும்.
வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது தொடர்பாக முக்கியமான முடிவை எடுக்கக்கூடும்.
10-ல் 6 தோல்வி: இந்திய அணியின் பயிற்சியாளராக கதவும் கம்பீர் நியமிக்கப்பட்ட பின்னர் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6-ல் தோல்வி அடைந்துள்ளது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 1-3 என இழந்துள்ளது.
அடுத்த டெஸ்ட் தொடர்? - ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருட சுழற்சியில் இந்திய அணி அனைத்து ஆட்டங்களையும் விளையாடி முடித்துவிட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறிய இந்திய அணி அடுத்த 2 வருட சுழற்சியில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago