சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இந்நிலையில், ஃபார்மில் இல்லாத காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும்; தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இந்த தொடரை சமன் செய்து டிராபியை தக்கவைக்கும். இந்த சூழலில் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இது குறித்து அவர் தெரிவித்தது:
“நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. இந்தப் போட்டியில் இருந்து மட்டுமே விலகி உள்ளேன். பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவினர் உடன் இது குறித்து மிகவும் எளிதான முறையில் கலந்து பேசினேன். ‘என்னால் ரன் சேர்க்க முடியவில்லை, நான் ஃபார்மில் இல்லை; இந்தப் போட்டி நமக்கு முக்கியமானது; ஃபார்மில் இருக்கும் வீரர் இதில் விளையாட வேண்டும் என்றேன்’. எனது கருத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு, ஆதரவு அளித்தார்கள்.
போட்டியில் இருந்து விலகும் இந்த முடிவு எனக்கு மிகவும் கடினமானது. அணியை முன்னிறுத்தி யோசிக்கும் போது இது அறிவார்ந்த செயல் என கருதுகிறேன். அதை தவிர வேறு எதையும் நான் யோசிக்கவில்லை.
எங்களது பேட்டிங் ஆர்டரில் சிலரது ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதனால் அதிகளவில் ஃபார்மில் இல்லாத வீரர்களை அணியில் கொண்டு நாம் விளையாட முடியாது. அதை நான் யோசித்து பார்த்தேன். நான் எங்கும் செல்லவில்லை. நான் ஓய்வு பெறவில்லை. எனது பேட்டில் இருந்து ரன் வராத காரணத்தால் விலகி உள்ளேன். இந்த நிலை அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு பிறகும் தொடரும் என எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி யாரும் சொல்ல முடியாது.
நான் யதார்த்தமான மனிதன். ஒருவர் வசம் இருக்கும் மைக், போனா, லேப்டாப்பில் எழுதும்/பேசும் எதுவும் எங்களது வாழ்வினை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். நாங்கள் எப்போது விளையாட வேண்டும் அல்லது எப்போது வெளியேற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடாது. நான் பக்குவம் கொண்ட மனிதன். அதனால் எனது வாழ்வில் எந்த முடிவை எப்போது எடுக்க வேண்டுமென்று எனக்கு தெரியும்.
எங்களது முழு கவனமும் சிட்னி போட்டியில் மட்டுமே உள்ளது. பும்ராவின் வளர்ச்சி மகத்தானது. அவரை கண்ட நாள் முதல் அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அது நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது” என கூறினார்.
ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக சிட்னி போட்டியின் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடிய ஷுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 20, இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago