சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
மோசமான ஃபார்ம் காரணமாக நேற்று தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் களமிறங்கினார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறாது என்று எண்ணுகிறேன். மெல்பர்னில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டிதான் ரோஹித்துக்கு கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம். டெஸ்ட் தொடரில் அவரைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறும்போது, “இந்த விஷயத்தில் சுனில் கவாஸ்கரின் கருத்தே எனது கருத்து. டாஸ் போடும்போது கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா ஒரு தகவலைத் தெரிவித்தார்.
விளையாடும் லெவனில் இடம்பெறாமல் விலகி இருப்பது என்பது ரோஹித் சர்மா எடுத்த முடிவு என்று பும்ரா தெரிவித்தார். ஷுப்மன் கில் விளையாடும்போது அணி மேலும் வலுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
போட்டியில் விளையாடுவதற்கு நீங்கள் (ரோஹித்) மனதளவில் தயாராக இல்லை. மேலும் இந்தத் தொடரில் போதுமான ரன்களை எடுக்கவில்லை. எனவே, விளையாடும் லெவனில் இடம்பெறாமல் நான் வெளியே இருக்கிறேன் என்று சொல்வது ஒரு கேப்டன் பொறுப்பில் உள்ளவர் எடுத்துள்ள தைரியமான முடிவு என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago