“சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் தைரியமாக அறிவிக்க வேண்டியதுதானே, அதில் ஏன் இத்தனை மர்மம், இத்தனை திரிபுகள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், ‘ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார். ரோஹித் சர்மா இந்தத் தொடரில் எடுத்த ஸ்கோர்கள் 3, 6, 10, 3 மற்றும் 9. மொத்தம் 31 ரன்கள். சராசரி 6.2 ரன்கள். இதற்கு மேலும் என்ன அத்தாட்சி வேண்டும் அவர் அணியில் நீடிக்கக் கூடாது என்பதற்கு?
“ஏன் டாஸ் வரை ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை மறைத்து வைக்க வேண்டும். அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆல் டைம் கிரேட் அல்லவே” என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் சர்ச்சைகளைக் கிளப்பும் ஒரு பெரிய கேள்வியைத் தூக்கிப் போட்டுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சஞ்சய் இது தொடர்பாகக் கூறும்போது, “ரோஹித்திற்கு ஓய்வு சரி. இந்திய கிரிக்கெட் பண்பாட்டின் மீது எனக்கு உள்ள பிரச்சினையே இந்த ரகசியச் செயல்பாடுதான்.
அவர் அணியிலிருந்து நீக்கம் என்பதை மறைத்து ரகசியம் பேணி காக்கும் அளவுக்கு ஒன்றும் அவர் ஆல் டைம் கிரேட் இல்லையே. எதற்கு இத்தனை மர்மம், புதிர்? இதுவே விராட் கோலியாக இருந்து இந்த மர்மம் காக்கப்பட்டால் என்னால் புரிந்துகொள்ள முடியும். சுமார் 60 டெஸ்ட்களை ஆடியுள்ள ரோஹித், ஒரேயொரு அயல் நாட்டுச் சதமே எடுத்துள்ளார். சராசரியும் 40 தான். ஏன் இவருக்கு இந்தப் புதிர்? ஏன் இந்த மர்மம்?” என்று மஞ்சுரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
» ரிஷப் பண்ட்டை மொஹீந்தர் அமர்நாத் ஆக்க முடியுமா? - கம்பீரின் சொதப்பல் வியூகங்கள்
» சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏமாற்றம்: 185 ரன்களுக்கு ஆல் அவுட்
அதாவது, “ரோஹித் இல்லாததை, அவர் தானாகவே அணியின் நலன் கருதி விலகியதாக பும்ரா கூறுகிறார் என்றால், அதை ஏன் முன் கூட்டியே சொல்லியிருக்கலாமே, அப்படி அது உண்மையாக இருப்பின்?” என்பதுதான் மஞ்சுரேக்கரின் கேள்வியின் சாராம்சம்.
ஒருவரை அணியிலிருந்து நீக்கினால் நீக்கப்பட்டுள்ளார் என்று மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிப்பதுதான் வெளிப்படைத்தன்மை. அவர் பெருந்தன்மையாக விலகினார். அணியின் நன்மைக்கு முன்னால் தன்னலம் பெரிதல்ல என்று அவர் தானாகவே விலக முன் வந்தார் என்றெல்லாம் அவரது நீக்கத்துக்கு லட்சியச் சப்பைக்கட்டுகள், சாக்குப் போக்குகள் ஏன் என்பதுதான் நம் கேள்வியும் கூட.
வேறு எந்த கிரிக்கெட் வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் இத்தகைய போக்குகள் கிடையாது. பாகிஸ்தானில் எந்த ரகசியத்தையும் எவரும் காப்பாற்றி விட முடியாது. இத்தகைய உண்மையை பட்டவர்த்தனமாக என்று பிசிசிஐ பேசுகிறதோ அப்போதுதான் இந்திய கிரிக்கெட்டில் நிரந்தர முன்னேற்றம் ஏற்படும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago