சிட்னி: சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிரா செய்வதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கவுதம் கம்பீர், “இங்கு டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கான அத்தனை அம்சங்களையும் எங்களது அணி கொண்டுள்ளது. அதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். இங்கு மட்டுமல்ல வரும் நாட்களில் சில நம்ப முடியாத விஷயங்களை நாங்கள் செய்யக்கூடும்.
எங்கள் அணியின் பேட்டிங் அல்லது பந்து வீச்சு இந்த தொடரில் சிறப்பாக இல்லையென்றால் 2-1 என்ற நிலையில் இந்த தொடர் இருந்திருக்காது. நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் சவாலான சூழலில் இருந்துள்ளோம். எந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். அணியாகவே வெற்றி மற்றும் தோல்வியை எதிர்கொள்கிறோம். எந்தவொரு தனிநபரும் இதற்கு பொறுப்பல்ல. இந்த தொடரை நிச்சயம் டிரா செய்வோம்.
» “மாநில மகளிர் ஆணையம் செல்லாதது ஏன்?” - அண்ணா பல்கலை. விவகாரத்தில் குஷ்பு கேள்வி
» மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கிய ஏலகிரி மலைப் பாதை!
அடுத்தப் போட்டியில் வெல்வது எப்படி என்பது மட்டும் நாங்கள் பேசியுள்ளோம். வேறு எது குறித்தும் நாங்கள் பேசவில்லை. ‘அணி தான்’ முக்கியம் என்ற எண்ணம் அனைத்து வீரர்களும் எண்ண வேண்டும். வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடலாம். ஆனால், சில சவாலான தருணங்களில் இப்படித்தான் விளையாட வேண்டுமென்றால் அதை செய்துதான் ஆக வேண்டும். அணிக்குள் எந்த பிளவும் இல்லை. அப்படி வரும் தகவல் அனைத்தும் உண்மையல்ல” என தெரிவித்துள்ளார்.
பும்ரா அடுத்த கேப்டன்? - இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மோசமான பார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். மிடில் ஆர்டர், தொடக்க ஆட்டக்காரர் என பேட்டிங் வரிசையில் எங்கு களம் கண்டாலும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள சிட்னி போட்டியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மாற்றாக அணியை பும்ரா வழிநடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையிலான அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago