பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரை சமன் செய்யும் வாய்ப்புடன் நாளை (ஜன.3) சிட்னியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்துக் களமிறங்குகிறது. இந்திய அணியில் தீவிர மாற்றமாக ரோஹித் சர்மா உட்கார வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சிட்னியில் வென்றால் தொடர் 2-2 என்று சமன் ஆகி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்ந்து இந்தியாவிடம் இருக்கும். 10 ஆண்டுகளாக இந்தியாவிடம் தான் பார்டர் கவாஸ்கர் டிராபி உள்ளது. சிட்னியில் தோற்றால் ஏன் டிரா ஆனால் கூட ஆஸ்திரேலியா நம்மிடமிருந்து டிராபியைப் பறித்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், களத்தில் கேப்டன்சியிலும் பேட்டிங்கிலும் கடும் சொதப்பலாக ஆடிவரும் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கரியர் முடிவுக்கு வருகிறது என்றே கொள்ளலாம். சிட்னி டெஸ்ட் அவர் ஆடமாட்டார் என்பதற்கான அறிகுறிகள் வலைப்பயிற்சியில் தென்பட்டதாக கிரிக் இன்போ உள்ளிட்ட தளங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
துருவ் ஜுரெல், ஷுப்மன் கில் நீண்ட நேரம் வலையில் பேட் செய்ய, ரோஹித் சர்மா வெறும் த்ரோ டவுன்களை மட்டும் எதிர்கொண்டார் என்பதால் நாளை ரோஹித் சர்மா உட்கார வைக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படிச் செய்தால் அது ஒரு பெரிய அதிரடி முடிவுதான்.
» ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை
» பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு: பாடவாரியான தேர்வு அட்டவணை வெளியீடு
இந்திய முகாமில் உராய்வுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது டீம் மீட்டிங்கில் ஒரு திட்டத்திற்குத் தலையாட்டி விட்டு களத்தில் பேட்டர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஆடுவது குறித்து கம்பீர் சாட்டையைச் சுழற்றியதாக தகவல்கள் ஊடகங்கள் வழி வந்தவண்ணம் இருக்கின்றன. இது உண்மையா பொய்யா என்று தெரியும் முன்னரே சில முன்னாள்கள் மீடியாவுக்குக் கசிந்தது எப்படி என்று பேசிவருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் ரோஹித் சர்மா அணியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் என்பதே உண்மை. அவரை நீக்குவதன் மூலம் இன்னொரு சுமையான விராட் கோலிக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்தது போல் இருக்கும் என்று கம்பீர் யோசிக்கலாம். முதல் இன்னிங்ஸ்களில் இந்திய அணி 300 ரன்களை எட்டுவதே கடும் போராட்டமாக உள்ளது. எனவே ஷுப்மன் கில்லை ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இறக்க முடிவெடுத்திருக்கலாம்.
கேப்டன்சியும் பும்ராவிடம் மீண்டும் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. வலைப்பயிற்சி செயல்பாடுகள் சூசகமாகத் தெரிவிப்பதெல்லாம் ரோஹித் அவ்வளவுதானா என்பதையே. ஏனெனில் கில் தேவை என்பதாலும் ஜுரெல் தேவை என்பதாலும் ரோஹித் சர்மாவும் அணியில் நீடிக்க வேண்டும் என்ற முடிவெடுத்தால் பாவம் இருக்கவே இருக்கிறார் பலிகடா வாஷிங்டன் சுந்தர். அவரை உட்கார வைப்பார்கள், கடைசியில் வரும் 40-50 ரன்களுக்கும் ஆப்பு வைத்து விடலாம்.
ஆகாஷ் தீப் இல்லை: ஆகாஷ் தீப் முதுகுத் தசைப் பிடிப்புக் காரணமாக ஆட மாட்டார். அவருக்குப் பதில் பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்ஷித் ராணா அணியில் தேர்வு செய்யப்படலாம். ஷுப்மன் கில் ஏன் ரோஹித் சர்மாவுக்குப் பதில் அணிக்கு வருவார் என்று ஊகிக்கப்படுகிறது எனில் கம்பீரின் நேரடிப் பார்வையில் கில் பயிற்சியில் ஈடுபட்டார். கம்பீரே அவருக்கு த்ரோ டவுன் செய்தார்.
சிட்னி பிட்ச்: சிட்னி பிட்ச் முன்னைப்போல் பேட்டிங் பாரடைஸ் அல்ல. கமின்ஸுக்கு வழங்கப்பட்ட தகவல்களின் படி ‘நல்ல கிரிக்கெட் பிட்ச்’ என்று சொல்லப்பட்டுள்ளது, அதாவது பிட்சில் புற்கள் தாராளமாக இருக்கும். பந்துகளில் வேகம் கூடுதலாக வருமாறு பிட்ச் இருக்கும் என்றே தெரிகிறது. காலநிலை முதல் 3 நாட்களுக்குப் பிரச்சனியில்லை, கடைசி 2 நாட்களில் கொஞ்சம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வெதர் ரிப்போர்ட் கூறுகிறது.
சிட்னியில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்தான் இதுவரை வெற்றி கண்டுள்ளது. கடந்த முறை அஸ்வினும், ஹனுமா விஹாரியும் நின்று டிரா செய்தனர். முன்னதாக ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத்தில் இந்திய அணி 406 ரன்கள் இலக்கை நோக்கி வெற்றிக்காக முன்னேறியது. புஜாராவும் அட்டகாசமாக ஆடினார்.
ஆனால் இன்று பண்ட்டும் ஃபார்மில் இல்லை, புஜாராவும் நம்மிடம் இல்லை, இந்திய அணி வென்று தொடரை டிரா செய்வது மிக மிகக் கடினமே. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியினர் இந்திய பலவீனங்களை சல்லடை போட்டு புரிந்து கொண்டுவிட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago