செஸ் சாம்பியன் ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகள் பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். உலக ரேபிட் செஸ் போட்டியில் ஹம்பி வெல்லும் 2-வது பட்டமாகும் இது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: 2-வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பியைப் பாராட்டுகிறேன். இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை ஹம்பி பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்