மெல்பர்ன்: பிட்சில் ஒன்றுமே இல்லை என்பதை ஜெய்ஸ்வால், கோலி சதக் கூட்டணி நிரூபித்தும், நின்று ஆடும் பொறுமையும் விவேகமும் இல்லாமல் ரிஷப் பண்ட் மிக அசிங்கமான ஷாட் ஒன்றை ஆடி டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். இது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ரிஷப் பண்ட் 28 ரன்களுக்கு சிரமம் இல்லாமல்தான் ஆடிவந்தார். சரி, அரைசதம் எடுத்த பிறகு பேட்டிங் பிட்சான இதில் நிச்சயம் ஒரு பெரிய சதத்தை எடுப்பார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையில், ஆஸ்திரேலிய அணி விக்கெட் எங்கிருந்து வரப்போகிறது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் இந்தா வச்சுக்கோ இன்று தன் விக்கெட்டைத் தாரை வார்த்தார் ரிஷப் பண்ட்.
எல்லா தருணங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமாறு ஆடுவது கூடாது, சூழ்நிலைக்கு ஏற்ப ஆட வேண்டும், இன்று முதல் படி பாலோ ஆனைத் தவிர்ப்பது என்றுதானே அவர் ஆடியிருக்க வேண்டும். ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக் மேல் தூக்கி அடிக்கும் டி20 ஷாட்டை ஆட முயன்றார், பந்து மட்டையின் முன் விளிம்பில் பட்டு டீப் தேர்ட்மேனில் நேதன் லயன் கையில் போய் உட்கார்ந்தது. இவர் ஆட்டமிழந்தது ஜடேஜாவையும் பாதித்தது.
பந்துக்கு ஆடுவது சரிதான், ஆனால் ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் பந்துக்கு ஆடியதும் அல்ல, சூழ்நிலைக்கு ஏற்றதும் அல்ல என்பதுதான் உண்மை. அன்று 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தான் ஆடிய ஷாட்கள் பற்றி கூறும்போது, “ஆடினேன்... இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அத்தகைய ஷாட்டில் அவுட் ஆகியிருந்தால் உண்மையில் முட்டாளாகவே என்னை காட்டியிருக்கும்” என்றார். அவர் கூறியது போல் ரிஷப் பண்ட் இன்று முட்டாள் தனமான ஷாட்டை ஆடி தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொண்டார். கவாஸ்கரும் இதையேதான் கூறினார்:
» எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்: சத நாயகன் நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை நெகிழ்ச்சி
“ஃபீல்டர்கள் இல்லாதபோது அவர் இத்தகைய ஷாட்டை ஆட முயற்சி செய்தார் என்றால் அவர் ஷாட் தேர்வைப் புரிந்து கொள்ள முடியும். அவர் ஆடிய இந்த ஷாட் கூட லெக் திசையில் செல்வதற்குப் பதிலாக ஆஃப் திசையில் சென்றது ஒரு துரதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம். அந்த குறிப்பிட்டத் தருணத்தில் இரண்டு ஃபீல்டர்களை இதற்காகவென்றே நிறுத்தி வைத்திருக்கும் போது இந்த ஷாட்டை ஆடியது முட்டாள் தனமானதே.
அதாவது இப்படி ஆடினால்தான் தன்னால் ரன்களை எடுக்க முடியும் என்று அவர் நினைப்பது போல் தெரிகிறது. மரபான கிரிக்கெட் முறையில் ரன்களை நம்மால் எடுக்க முடியாது என்று அவர் நினைத்தாரென்றால், எப்போதும் டவுன் த ட்ராக் ஷாட்டோ, அல்லது இப்படிப்பட்ட ஷாட்டோதான் நமக்கு ரன்கள் கொடுக்கும் என்று அவர் நினைத்தாரென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அது எப்போதும் வெற்றியைத் தராது.
இப்படித்தான் ஆடுவார் என்றால் அவர் எப்போதாவது ரன்களை எடுப்பார் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும், இப்படித்தான் ஆடுவார் என்றால் அவர் 5ம் நிலையில் இறங்கக் கூடாது, இன்னும் பின்னால் இறங்க வேண்டும் என்றார் கவாஸ்கர்.
பண்ட் அவுட் ஆனதைப் பார்த்த கவாஸ்கர் வர்ணையில், “ஸ்டுபிட் ஸ்டுபிட் ஸ்டுபிட், இரண்டு ஃபீல்டர்கள் அங்கு நிற்கிறார்கள். இருந்தும் இந்த ஷாட்டுக்குச் செல்கிறார், இதற்கு முந்தைய பந்தில்தான் இதேபோல ஷாட்டை முயன்று பந்து மட்டையில் சிக்கவில்லை. விக்கெட்டை இப்படித்தான் தூக்கி எறிவதா? இதுதான் என் நேச்சுரல் கேம் என்று சொல்லக் கூடாது, சூழ்நிலைக்கு ஏற்றவாறும் ஆடப்பழக வேண்டும். என்ன சொன்னாலும் அது ஸ்டுபிட் ஷாட், அது அணியின் காலை இப்போது வாரியுள்ளது” என்று சாடினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago