பேட்டிங் உத்தியில் மாற்றம் செய்யும் விராட் கோலி!

By ஆர்.முத்துக்குமார்

இந்திய அணியின் பேட்டிங் நடப்பு பார்டர் - கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகே கடுமையான பலவீனங்களின் காட்சிப்படுத்தலாக மாறிவிட்டது, மாற்றி விட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள், குறிப்பாக 5 வீரர்களின் பார்ம் மெல்பர்ன் டெஸ்ட்டில் வெற்றி பெற மிக மிக முக்கியமானது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் இவர்கள் தலா 50 ரன்களை எடுத்தே ஆக வேண்டும்.

இந்நிலையில், வலைப்பயிற்சியில் விராட் கோலி தன் பேட்டிங் உத்திகளில் சிறு மாற்றங்களை செய்துள்ளார். அவரது ஈகோ பெரியது, மண்டை வீங்கி முன் காலை குறுக்காகப் போட்டு வெளியே செல்லும் பந்துகளை வாரிக்கொண்டு கவர் ட்ரைவ் ஆடுகிறேன் என்று எட்ஜ் ஆகி அவுட் ஆவதைப் பார்த்துப் பார்த்து நமக்கே சலிப்புத் தட்டிவிட்டது, சமயங்களில் அவரது ரசிகர்களுக்கும் ரசிகர் அல்லாதோரும் அவர் அவுட் ஆகும் விதத்தைப் பார்த்து கோபாவேசம் அடைந்திருப்பார்கள்.

ட்ரிக்கர் மூவ்மெண்ட் என்று சொல்லக் கூடிய பந்து வருவதற்கு முந்தைய நகர்வினால் தான் விராட் கோலியை தட்டிப் போட்டு எடுத்து விடுகின்றனர் எதிரணியினர். மெல்பர்ன் வலைப்பயிற்சியில் விராட் கோலி சிறு மாற்றங்களைச் செய்துள்ளார். வெறும் உத்தியை மாற்றுவதனால் மட்டும் பயனளிக்காது. அணுகுமுறையையும் மனநிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இடது காலை முன்னால் குறுக்காக நீட்டி சம்பந்தமில்லாத பந்துகளை மட்டையை நீட்டி எட்ஜ் ஆவார். இல்லையேல் இடது காலை முன் கூட்டியே நீட்டி கமிட் ஆகி சற்றே பேக் ஆஃப் எழும்பும் பந்துகளை ஆடாமல் விடுவதா, ஆடுவதா என்ற இரட்டை மனநிலையில் எட்ஜ் ஆவார். இதைத் தவிர்க்க ஒரே வழி.

இடது காலை முன் கூட்டியே தூக்கி முன்னால் கொண்டு வராமல் தேவைப்பட்டால் நேராக இடது காலை சற்றே முன்னால் நகர்த்தி, பந்தின் லெந்த்தைப் பார்த்த பிறகு பின் காலை பின்னால் குறுக்காகவோ, நேராகவோ கொண்டு வந்து பேக்ஃபுட்டிலோ ஆட வேண்டும், இதைத்தான் வலைப்பயிற்சியில் செய்தார் விராட் கோலி. மேலும், பந்துகளை எப்படி ஆடாமல் விடுவது என்பதிலும் இப்போது பயிற்சி எடுத்துக் கொண்டு அனாவசியமாக பந்தைத் தொடாமல் ஆடாமல் லீவ் செய்ததையும் பார்க்க முடிந்ததாக வலைப்பயிற்சி குறித்த செய்திகளில் ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், கிரீசுக்கு சற்று வெளியே நிற்பதில் மாற்றமில்லை.

மாறாக ரோஹித் சர்மாவின் தடுப்பாட்டம் சரியாக இல்லை, ஓவர் எச்சரிக்கையாக ஆடி தன்னம்பிக்கையற்ற விதத்தில் மட்டையைப் பந்துக்கு பதற்றமாகக் கொண்டு செல்கிறார். பார்ட் டைம் பவுலரிடம் பவுல்டு ஆனார். ரோஹித் சர்மா நிச்சயம் இந்தத் தொடரோடு ஒதுங்கிக் கொள்வது நல்லது. நல்ல பேட்டர்கள் வரிசையாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். வலைப்பயிற்சியிலும் ரோஹித் சர்மா கால்கள் நகரவில்லை.

ஆனால், வலைப்பயிற்சி வேறு ரியல் டெஸ்ட் மேட்ச் வேறு, அங்கு களவியூகம், எதிரணி பவுலர்களின் மைண்ட் கேம் இவற்றுக்கேற்ப ஆட்டத்தை மாற்றி மாற்றி ஆட வேண்டும். ஆஸ்திரேலிய பவுலர்கள் ஒரு ப்ளூபிரிண்ட் வைத்து அதன் படி திட்டமிட்டுத்தான் ஆடுவார்கள், அதைக் காலி செய்தால் பிளான் பி என்று ஷார்ட் பிட்ச் உத்திக்கு வருவார்கள், அதையும் உடைத்து விட்டால் செய்வதறியாது ரன்களைக் கசிய விடுவார்கள். ஆகவே ஆஸ்திரேலியாவின் திட்டத்தை முறியடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

6 days ago

மேலும்