மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள்: ஜடேஜா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதையடுத்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில் முடிவடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. 4-வது டெஸ்ட் வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் பிரிஸ்பனில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:

இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம். டாப் ஆர்டரில் ரன்கள் குவிக்காதபோது, பின்வரிசை வீரர்களின் பொறுப்பும் அழுத்தமும் அதிகரிக்கும்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். பேட்டிங்கில் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினால் அணி சிறப்பாக செயல்படும்.

தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் 1-1 என்ற கணக்கில் இருப்பது நல்ல விஷயம்தான். அடுத்த இரண்டு ஆட்டங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் நாங்கள் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றாலே கோப்பையை தக்க வைத்துக் கொள்வோம். ஏனெனில் கடைசி இரு தொடர்களையும் நாங்கள் வென்றுள்ளோம். சிறந்த முயற்சியை மேற்கொள்வதற்கு மெல்பர்ன் போட்டி நல்ல வாய்ப்பு. கடைசி போட்டியில் என்ன நடைபெறுகிறது என்பதை அதன் பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு மெல்பர்ன் போட்டி மிகவும் முக்கியமானது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறப்போகிறார் என்பது பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர், கடைசி நேரத்தில்தான் எனக்கு தெரியும். இது நடக்கப் போகிறது என்று யாரோ சொன்னார்கள், நானும், அஸ்வினும் முழு நாளையும் ஒன்றாகக் கழித்தோம். அப்போது அவர், ஓய்வு பெறுவது குறித்து எனக்கு ஒரு குறிப்பைக் கூட கொடுக்கவில்லை. கடைசி நிமிடத்தில் நான் தெரிந்துகொண்டேன். அஷ்வின் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

களத்தில் அஸ்வின் எனக்கு ஆலோசகராக இருந்துள்ளார். நாங்கள் பல ஆண்டுகளாக இணைந்து விளையாடி உள்ளோம். போட்டி நிலவரம் குறித்து களத்தில் ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிக்கொள்வோம். இப்போது இவை அனைத்தையும் நான் தவறவிடுவேன்.

இந்திய அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர் கிடைப்பார் என்று நம்புகிறேன். ஒரு வீரரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று இல்லை. அனைவரும் ஒருநாள் செல்வார்கள். அதற்கு மாற்று வீரர்களை அணி பெறும். இதில் இருந்து நாங்கள் நகர்ந்து செல்ல வேண்டும். இளைஞர்கள் வாய்ப்பைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்