சென்னை: ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஈக்விடாஸ் நிறுவனம் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தமிழகம் மற்றும் கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 23 மாவட்டங்களில் இருந்து 108 பள்ளிகள் பங்கேற்கின்றன.
ஜேஎஸ்கே டி20 தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட போட்டி வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சென்னை உட்பட 23 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 15 இடங்களில் நடத்தப்படுகிறது. தொடரின் 2-வது மற்றும் இறுதிக்கட்ட போட்டி ஜனவரி 17 முதல் 22-ம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதும்.
இந்நிலையில் இந்த தொடருக்கான கோப்பை மற்றும் அணிகளின் சீருடை அறிமுக விழா சென்னை சேப்பாக்கம் மைதான வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், சிஎஸ்கே வீரர்கள் முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத், டிஎன்சிஏ உதவி செயலாளர் ஆர்.என்.பாபா, சிஎஸ்கே அகாடமியைச் சேர்ந்த லூயிஸ் மரியோனா, ஈக்விடாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விக்னேஷ் முரளி, சிஎஸ்கே அதிகாரி எஸ்.ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago