ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். அவருக்கான பாரட்டுகளும், புகழாரங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டித்தொடர் தான் முதலில் வருகிறது. அதில் நிச்சயம் அஸ்வினுக்கு வாய்ப்பிருக்காது. அவருக்கு வயதும் 38 ஆகி விட்டது. மேலும் பந்துகள் அவருக்கு சமீபகாலமாக திரும்புவதில்லை. ஸ்பின் ஆவதில்லை. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறினார்.
இல்லையெனில் அஸ்வின் அணியில் இருக்கும் போது நியூஸிலாந்து போன்ற ஒரு அணி இங்கு வந்து இந்தியாவை 0-3 என்று முற்றொழிப்பு செய்து விட முடியுமா என்ன? ஆகவே அவருக்கே போதும் என்று தோன்றியிருக்கலாம். இந்நிலையில் மேட்ச் வின்னர் அஸ்வினின் சிலபல சுவாரஸ்ய புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.
அஸ்வின் எடுத்த 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 374 விக்கெட்டுகள் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன. இது உலகில் 5வது இடத்தில் உள்ள சாதனையாகும். மேலும் இந்திய டெஸ்ட் வெற்றிகளில் 300க்கும் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக இருந்த முதன்மை பவுலர் அஸ்வின் தான். வெற்றி பெற்ற போட்டிகளில் இலங்கைக்காக முரளிதரன் 41 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 31 முறை 5 விக்கெட்டுகளை இன்னிங்சில் கைப்பற்றியுள்ளார். அஸ்வினுக்கு இதில் 2வது இடம்.
» “எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” - அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
» ‘இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்’ - அஸ்வினை புகழ்ந்த சச்சின்
சதவீதத்தில் கூற வேண்டுமென்றால் அஸ்வினின் 69.65% விக்கெட்டுகள் வெற்றிபெறுவதில் பங்களிப்பு செய்துள்ளன. இந்த விதத்தில் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், பிரெட் லீ முதல் 3 இடங்களில் உள்ளனர்.
பவுலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அவர் அடித்த 6 சதங்களில் 5 சதங்கள் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளன. கடைசியாக சென்னையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி 143/6 என்று தடுமாறிக் கொண்டிருந்த போது லஷ்மன் ஸ்டைல் சதம் ஒன்றை அடித்ததும் வெற்றிக்கான பங்களிப்பே. இந்தச் சதத்தை மறக்க முடியாது. அஸ்வின் டெஸ்ட் தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட 11 தொடர்களில் 6 தொடர்களில் 25-க்கும் கூடுதலான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தம் 7 பல்வேறு டெஸ்ட் தொடரில் 25+ விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு தனித்த சாதனையாக விளங்குகிறது.
ஓப்பனிங் பவுலராக சாதனை: புதிய பந்தில் எடுத்த எடுப்பிலேயே தொடக்க ஓவர்களையும் அஸ்வின் வீசியுள்ளார். அந்த வகையில் 54 முறை இந்திய அணிக்காக புதிய பந்தில் தொடங்கியுள்ளார். இதில் 180 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதும் ஒரு தனித்துவமான சாதனையாக விளங்குகிறது. இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் ரங்கனா ஹெராத் ஓப்பனிங் பவுலிங் போட்டு 104 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மற்றொரு சுவாரஸ்யமான புள்ளி விவரம் என்னவெனில் முதல் 20 ஓவர்கள் வீசியதில் அஸ்வின் 133 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இடது கை பேட்டர்களின் சிம்ம சொப்பனம்: இடது கை பேட்டர்களை மட்டும் 268 முறை வீழ்த்தி தனித்த சாதனையை தன் வசம் வைத்துள்ளார். வலது கை வீரர்களையும் விட்டு வைக்கவில்லை 269 வலது கை பேட்டர்கள் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அனைத்து வடிவங்களிலும் சேர்த்து இந்தியாவுக்காக 765 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அஸ்வின், கும்ப்ளேயின் 953 விக்கெட்டுகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் 750 விக்கெட்டுகள் 4000 ரன்கள் என்ற டபுள் சாதனையை நிகழ்த்தியவர்களில் அஸ்வின் 6வது வீரராக உள்ளார்.
உள்நாட்டில் 65 டெஸ்ட்களில் 383 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர், உலக அளவில் 4வது பவுலர். உள்நாட்டில் இந்தியா பெற்ற வெற்றிகளில் அஸ்வின் 303 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். முரளிதரனை விட 2 விக்கெட்டுகள் குறைவு. அஸ்வின் விளையாடிய 106 டெஸ்ட்களில் இந்திய அணி 61 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. டெண்டுல்கர் (72), விராட் கோலி (61) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago