நடுவரின் விளையாட்டு, ரோஹித்தின் அபத்த கேப்டன்சி, பவுலிங் பலவீனம்: இந்திய அணியின் பிரச்சினைகள்

By ஆர்.முத்துக்குமார்

பிரிஸ்பன் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் 377 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் ஸ்மித் செமயாக தடவு தடவென்று தடவி ஒரு சதத்தை எடுத்தார். ட்ராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். இந்தியப் பந்து வீச்சில் பிரச்சினை, நடுவர் தீர்ப்பு ஒன்று ஸ்டீவ் ஸ்மித் பிளம்ப் அவுட் ஆனதற்கு தரப்படவில்லை, பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் தாண்டி பந்து வீச்சில் எந்த ஒரு ஊடுருவலும் இல்லாதது.

ஸ்டீவ் ஸ்மித் அத்தனைத் தடவி ரன்களை எடுக்கும் அளவுக்கு அவருக்கு பொறுமையும் நிதானமும் இருக்கிறது. ஈகோ அவருக்கு இல்லை. ஆனால் நம் கோலி இத்தகைய பொறுப்புடன் ஆடுவதில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் 10 பந்துகளைக் கூட அவர் ஆடாமல் விட்டு விடும் அளவுக்கு பொறுமையற்றவராகத் திகழ்கிறார். அவரை கடந்த 4 ஆண்டுகளாக எதிரணியினர் சொல்லி சொல்லி அவுட் ஆக்கி வருகின்றனர். உடனே பெர்த் சதம் என்பார்கள், அது 300 ரன்களுக்குப் பிறகு இறங்கி எடுத்த சதம். அழுத்தம் அதிகமாகும் அவர் 4 ஆண்டுகளாக ஆடுவதேயில்லை என்பதுதான் உண்மை. அவரை அணியில் இருந்து தூக்கும் திராணி கேப்டனுக்கோ, பயிற்சியாளருக்கோ இல்லை. கேப்டனால் ஏன் செய்ய முடியாது. ஏனெனில் அவரே கேப்டனாக இருப்பதனால்தான் அணியில் நீடிக்கிறார்.

டிராவிஸ் ஹெட்டிற்குரிய களவியூகம் என்னவென்றே ரோஹித் சர்மாவுக்குத் தெரியவில்லை. மோர்னி மோர்கெலுக்கும் தெரியவில்லை. இடது கை வீரரான கம்பீருக்கும் தெரியவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு மேலே வீசும் பந்துகளை அனாயசமாக அவர் ஸ்கொயர் கட் அடிக்க முடிகிறது என்றால் பந்தில் வேகம் இல்லை என்று தெரிகிறது. அதே போல் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு அவர் பலவீனமானவர் என்றாலும் நம் ஷார்ட் பிட் ச் பந்துகள் அவரை அச்சுறுத்துவதேயில்லை.

அனைத்திற்கும் மேலாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி இயன் சாப்பல் கூறுவது போல் தடுப்பு உத்தியாக இருக்கிறதே தவிர விக்கெட்டுகளை விழவைக்கும் உத்தியாக ஆக்ரோஷமாக இல்லை. தோனி போல் மிகவும் மந்தமான ஒரு டெஸ்ட் கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா. உத்தி ரீதியாக அவருக்கு பிட்ச் பற்றிய அறிதல் இல்லை.

வெறும் பும்ராவை மட்டுமே வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை ஒரு டெஸ்ட்டில் வீழ்த்தலாம் அவ்வளவே. பும்ராவும் முதலில் புதிய பந்தில் விக்கெட் எடுக்கிறார். பின்பு டைட்டாக வீசுகிறார், அச்சுறுத்துகிறார், ஆனால் எதிர்முனையில் சப்போர்ட் இல்லை. பிறகு அவரே 2-வது புதிய பந்தில் வந்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டியுள்ளது. இது பெரிய அவலம். ஆனால் இன்று சிராஜ் அதிர்ஷ்டமற்றவர்.

ஸ்டீவ் ஸ்மித் ஒரு இன் கட்டரை ஆடாமல் விட அது பிளம்ப் இன் பிரண்ட் தெளிவான அவுட், ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ரிவியூவில் பந்து ஸ்ட்மபைத் தாக்குகிறது ஆனால் அம்பயர்ஸ் காலில் இது தப்பிப்போய் விட்டது. ஸ்மித் ஏகப்பட்ட பீட்டன்கள், எட்ஜ்கள். ஆனாலும் ஈகோ பார்க்காமல் மிக மோசமான ஒரு இன்னிங்சை ஆடினார், ஆனாலும் அது பயனுள்ள இன்னிங்ஸ். இப்படித்தான் இந்திய பேட்டர்களும் யோசிக்க வேண்டும்.

இந்திய பேட்டிங் பெர்த்தில் 2-வது இன்னிங்சில் ஆடியது ஏதோ வழக்கமான பாதையிலிருந்து விலகியதாகவே இப்போது தோன்றுகிறது. ஏனெனில் அடிலெய்ட் பேட்டிங் பிட்சில் இரு இன்னிங்ஸ்களிலும் ஆடிய விதம்தான் இந்திய அணியின் உண்மையான பேட்டிங். அதாவது போதாமைகளின் வெட்ட வெளிச்சம்.

முதலில் வாஷிங்டனை நீக்கி விட்டு அஸ்வின், பிறகு இப்போது ஜடேஜா, ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஆஸ்திரேலியாவை 450 ரன்கள் எடுக்கவிட்ட பிறகு ஜடேஜா 50 ரன்களை எடுத்தாலும் அது அவரது தேர்வை நியாயப்படுத்திவிடுமா? பவுலிங்கில் என்ன ஆனார் அவர்?

இன்று நிதிஷ் குமாரும் ஜடேஜாவும் சேர்ந்து 29 ஓவர்களில் 141 ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஒரு விக்கெட்டை அதாவது லபுஷேனை நிதிஷ் வீழ்த்தியது மீண்டும் ஒரு பிறழ்வுக்காட்சி தானே தவிர அது நல்ல பந்துக்கு விழுந்த விக்கெட் அல்ல. இந்த 29 ஓவர்களில் வெறும் 65 -70 ரன்களையே கொடுத்து 2-3 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு பந்து வீச்சில் டெப்த் இருந்திருந்தாலோ, ஸ்மித்திற்கு நடுவர் எல்.பி. கொடுத்திருந்தாலோ இன்று ஆஸ்திரேலியா அதிகபட்சம் போனால் 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்பார்கள்.

ஸ்மித்தும், ஹெட்டும் இணைந்து 302 பந்துகளில் 241 ரன்களை விளாசியுள்ளனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு சிறந்த பவுலர்களைக் கொண்டு தொடங்காமல் நிதிஷ் ரெட்டியையும் ஜடேஜாவையும் வைத்து தொடங்குகிறார் கேப்டன் ரோஹித் சர்மா. அப்படியே தோனிதான் நினைவுக்கு வந்தார். லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஒரு முறை கிரீன் டாப் பிட்சி உணவு இடைவேளைக்குப் பிறகு ரெய்னாவிடம் கொடுத்த தமாஷ் போன்றதுதான் ரோஹித் இன்று செய்தது.

இந்த 10 ஓவரில் என்ன நடந்தது 63 ரன்கள் விளாசப்பட்டது. அதுவரை தடவிக்கொண்டே ஆடி வந்த ஸ்மித் இந்த 10 ஓவர்களில் ‘சரிதாண்டா’ என்று தனது ஷாட்களுக்குத் திரும்பினார். ஸ்மித் முதல் 50 ரன்களை எடுக்கும் முன்பு ஆகாஷ் தீப் கிட்டத்தட்ட 30 முறை ஸ்டீவ் ஸ்மித்தை பீட்டன் செய்தார், ஆனாலும் அதிர்ஷ்டம் இல்லை. கடைசியில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார். ஒருவேளை தேநீர் இடைவேளைக்குப் பிறகு பும்ராவையோ, ஆகாஷ் தீப்பையோ கொண்டு வந்திருந்தால் ஸ்மித் சதம் எடுக்காமலே வெளியேறியிருக்கலாம்.

ரோஹித் சர்மா ஒரு லாயக்கற்ற கேப்டன் என்பதை மீண்டும் நிரூபித்தார். இன்று ஆஸ்திரேலியா ஆதிக்க நிலைக்குச் சென்று டெஸ்ட்டை தன் கைவசம் கொண்டு வந்ததற்கு ரோஹித் சர்மாவின் மோசமான கேப்டன்சியே பிரதான பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்