சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன.
7-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போதிலும் அதனை சரியான பயன்படுத்திக் கொள்ளததால் டிராவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 8-வது சுற்றில் டிங் லிரென், குகேஷ் மோதினார்கள். லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடன் களமிறங்கினர். 51-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக இது 6-வது டிராவாக அமைந்தது.
இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 8 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 6 சுற்றுகளே உள்ளன. இதனால் அடுத்த இரு சுற்றுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதலில் 7.5 புள்ளிகளை எந்த வீரர் அடைகிறாரோ? அவர், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். இன்று பிற்கல் 2.30 மணிக்கு 9-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago