நியூஸிலாந்துடன் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

By செய்திப்பிரிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 348 ரன்களும், இங்கிலாந்து 499 ரன்களும் குவித்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை டேரில் மிட்செல் 31 ரன்களுடனும், நேதன் ஸ்மித் ஒரு ரன்னுடனும் தொடங்கினர். அபாரமாக ஆடியடேரில் மிட்செல் 84 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். நேதன் ஸ்மித் 21, மேட் ஹென்றி 1, டிம் சவுத்தி 12 ரன்கள் சேர்த்தனர். வில்லியம் ஓ ரூர்க்கி 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 74.1 ஓவர்களில் 254 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்ததது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 6 விக்கெட்களைச் சாய்த்தார்.

இதைத் தொடர்ந்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. ஜாக் கிராவ்லி 1, பென் டக்கெட் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேக்கப் பெத்தேல் 50, ஜோ ரூட் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்கள் வீழ்த்திய பிரைடன் கார்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சச்சின் சாதனை முறியடிப்பு: கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்ஸில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர் டெஸ்ட் போட்டிகளின் 4-வது இன்னிங்ஸ்களில் மட்டும் 1,630 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதையடுத்து இந்திய ஜாம்பவான் சச்சின் சாதனையை ரூட் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளின் 4-வது இன்னிங்ஸில் சச்சின் 1,625 ரன்கள் சேர்த்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்