சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது. 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தார். தொடர்ந்து 4-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் 5-வது சுற்றில் நேற்று டிங் லிரென், குகேஷ் மோதினார்கள். டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 5 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago