நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 2, டாம் லேதம் 47, ரச்சின் ரவீந்திரா 34, டேரில் மிட்செல் 19, கேன் வில்லியம்சன் 93, டாம் பிளண்டெல் 17, நேதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 41, டிம் சவுதி 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 91 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிம் சவுதி 15 ரன்களிலும், வில் ஓ’ரூர்க்கி ரன் ஏதும் எடுக்காமலும் பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தனது 5-வது சரை சதத்தை அடித்தை கிளென் பிலிப்ஸ் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்லில் பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஸாக் கிராவ்லி 0, அறிமுக வீரரான ஜேக்கப் பெத்தேல் 10, ஜோ ரூட் 0 ரன்களில் நடையை கட்டினர். இதன் பின்னர் பென் டக்கெட்டுடன் இணைந்து ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் சீராக விளையாடி வந்த பென் டக்கெட் 62 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம் ஓ’ரூர்க்கி பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய ஆலி போப் விரைவாக ரன்கள் சேர்த்தார்.
தனது 8-வது அரை சதத்தை கடந்த ஆலி போப் 98 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் 123 பந்துகளில், 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 7-வது சதமாக அமைந்தது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 74 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது.
ஹாரி புரூக் 132 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் நேதன் ஸ்மித் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டிம் சவுதி, மேட் ஹென்றி, வில் ஓ’ரூர்க்கி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 29 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago