நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பவுலிங் வரிசையை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அதன் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதோடு இந்திய ஸ்பின்னர்கள் பற்றியும் அவர் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதோ: ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பெவன் - ஜான் ஜேகப்ஸ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கிள்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித், நமன் தீர், வில் ஜாக்ஸ், ராஜ் அங்கத் பவா, விக்னேஷ் புதுர், அல்லா கசன்ஃபார், கரண் ஷர்மா, மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், அஸ்வினி குமார், ரீஸ் டாப்லி, சத்ய நாராயண ராஜு, அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ்.
இவர்களில் இரண்டு ஓவர்சீஸ் இடது கை வீச்சாளர்கள், இரண்டு ஓவர்சீஸ் ஸ்பின்னர்கள் உள்ளனர். இந்நிலையில், அணிச் சேர்க்கைக் குறித்து ஜியோ சினிமாவுக்கு ஆகாஷ் அம்பானி கூறும்போது, “எங்களின் டாப் 7 வீரர்களில் 4 வீரர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். மீதமுள்ள 2 வீரர்களை அந்த 7 வீரர்களுக்குத் துணையாகத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பவுலிங் சேர்க்கையை சரியாக்க விரும்பினோம். இரண்டு நாள் ஏலத்தில் அதை நிறைவு செய்துள்ளோம். ட்ரெண்ட் போல்ட், டாப்லி அணிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம். இருவருமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்.
» கனமழை எதிரொலி: புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரிப்பு
» “கேட்டது 8 நாள் கால்ஷீட், விஜய் சேதுபதி ‘விடுதலை’யில் நடித்தது 120+ நாட்கள்!” - வெற்றிமாறன்
ஒவ்வொரு முறையும் ஏலத்தை மதிப்பீடு செய்பவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்பின் துறையில் பலவீனமாக உள்ளது என்று கூறுவார்கள். இந்திய ஸ்பின்னர்களை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அவர்கள் அதிகம் ரன்களை விட்டுக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். சில இடங்களில், சில பிட்ச்களில் நாங்கள் சான்ட்னர், அல்லா கஜன்ஃபர் ஆகிய இருவரையுமே ஆடவைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
6-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களை உந்துகிறது. எப்போதையும் விட இந்த 6-வது கோப்பை எங்களுக்கு மிக மிக முக்கியம். எங்களுக்கு 6-வது கோப்பையை வெல்வது முதல் கோப்பையை வெல்வது போன்றது. இந்த முறை 6-வது கோப்பை நிச்சயம்.” என்றார் ஆகாஷ் அம்பானி.
இந்திய ஸ்பின்னர்கள் அதிகம் ரன் கொடுக்கிறார்கள் எனும் கூற்று எப்படிப்பட்டது? இந்திய கிரிக்கெட்டை வளம் பெறச் செய்வோம் என்றுதான் ஐபிஎல் உரிமையாளர்கள் ஆரம்பத்தில் ஏலம் எடுத்தனர். ஆனால், இப்போது இந்திய ஸ்பின்னர்கள் ரன்களை விட்டுக் கொடுக்கிறார்கள் என்ற விமர்சனம் கிரிக்கெட் நிபுணத்துவம் அல்லாத ஓர் அணி உரிமையாளரிடமிருந்து வருவது ஐபிஎல் தொடரால் இந்திய கிரிக்கெட் பயனடையுமா என்ற கேள்வியை மறு பரிசீலனைச் செய்ய வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago