அவசரமாக தாயகம் திரும்பினார் கவுதம் கம்பீர்

By செய்திப்பிரிவு

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகலிரவாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் ‘அவசர சூழ்நிலை’ காரணமாக நேற்று (26-ம் தேதி) அதிகாலை பெர்த் நகரில் இருந்து விமானம் மூலம் தாயகம் புறப்பட்டார். இதனால் அவர், வரும் 30-ம் தேதி கான்பெர்ராவில் தொடங்கும் 2 நாட்கள் கொண்ட பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியினருடன் இருக்க மாட்டார்.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “கவுதம் கம்பீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு புறப்பட்டார். இது தவிர்க்க முடியாத தனிப்பட்ட அவசரநிலையாகும். 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவர், அடிலெய்டுக்கு திரும்புவார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்