சிஎஸ்கே அணியில் சேம் கரண்; போனியாகாத ஷர்துல், கேன் வில்லியம்சன் | ஐபிஎல் ஏலம் நாள் 2 அப்டேட்

By செய்திப்பிரிவு

ஜெட்டா: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான இன்று சேர் கரணை ரூ.2.40 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ளது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சன் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இதனிடையே கேன் வில்லியம்சன், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்களை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கியது. முதல்நாளில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 3.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் நியூஸிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், க்ளன் பிலிப்ஸ் மற்றும் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், ரஹானே, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோரை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

வெஸ்ன் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை 1.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. ஃபாப் டு பிளசிஸை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆர்சிபியிடம் ஆர்டிஎம் வாய்ப்பு இருந்தும் டு பிளசிஸை வாங்க அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட சேம் கரணை சிஎஸ்கே நிர்வாகம் ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சனுக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டிப்போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி போட்டிப்போட்டது. முடிவில் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல்-ஐ வாங்க யாரும் முன்வரவில்லை.

கடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக ஆடிய க்ருணால் பாண்டியாவை ஆர்சிபி ரூ.5.75 கோடிக்கு வாங்கியது. அவரை வாங்க ராஜஸ்தான் அணி போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ராணாவை 4.20 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது. அவரை வாங்க ஆர்சிபி 4 கோடி வரை சென்ற நிலையில், ராஜஸ்தான் தட்டி தூக்கியது. | வாசிக்க > ரிஷப் பந்த் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ரூ.26.75 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி - ஐபிஎல் ஏலம் நாள் 1 ஹைலைட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்