சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடவுள்ளார்.
இந்தப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற உள்ளது.
உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலமாக டி. குகேஷ் உலக செஸ் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றிருந்தார்.
இந்தப் போட்டியில் உலக சாம்பியன் லிரெனுடன் மோதும், 18 வயதான தமிழக வீரரான டி. குகேஷ் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் குகேஷ் வெற்றி பெற்றால், மிக இளம் வயதில் உலக செஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை புரிவார்.
» கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளை 2025 ஏப்ரலுக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்
அதே நேரத்தில் உலக சாம்பியன் என்ற முறையில், பட்டத்தைத் தக்க வைக்க குகேஷுடன் மோதுகிறார் டிங் லிரென்.
கடந்த 2023-ம் ஆண்டில் ரஷ்ய வீரர் இயான் நெபோம்னியாச்சியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் டிங் லிரேன். சீன நாட்டைச் சேர்ந்த முதல் உலக செஸ் சாம்பியன் இவர்தான். அதேநேரத்தில், கடந்த 9 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் லிரேன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நேற்று முன்தினம் சிங்கப்பூரிலுள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்றது.
14 சுற்றுகள்: இந்தத் தொடர் 14 சுற்றுகளை கொண்டதாக அமைந்துள்ளது. இதில் ஒரு சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். போட்டி டிராவில் முடிந்தால் அரைப்புள்ளி மட்டுமே கிடைக்கும். எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளை பெறுகிறாரோ, அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார். ஒருவேளை 14 போட்டிகளுமே டிராவில் முடிவடைந்து, இருவருமே தலா 7 புள்ளிகளைப் பெற்றிருந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டை-பிரேக் முறை கடைபிடிக்கப்படும்.
டை-பிரேக் தேவைப்பட்டால் டிசம்பர் 13-ல் நடைபெறும்.இந்த போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.
இந்த உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் மொத்தமாக ரூ.20.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரருக்கு தனியாக ரூ.1.67 கோடி பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டிகளை ஃபிடே யூடியூப் சேனலில் காணலாம். பட்டம் வெல்பவருக்கு சுமார் ரூ.11 கோடியும், 2-வது இடம் பிடிப்பவருக்கு சுமார் ரூ.10.13 கோடியும் கிடைக்கும்.
இதனிடையே குகேஷ் 50 சதவீதம் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என்று சர்வதேச செஸ் சம்மேளனமான ஃபிடேவின் தலைமைச் செயல் அதிகாரி எமி சுடோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போட்டி குறித்து டி.குகேஷ் கூறும்போது, “இந்தப் போட்டியில் பட்டம் வெல்வதற்கு எனக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். பொதுவாக, கணிப்புகள் மற்றும் யாருக்கு அதிக வாய்ப்பு யாருக்கு என்பது போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இறுதியில் கேமை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன்” என்றார்.
டிங் லிரென் கூறும்போது, “நான் அண்மையில் முடிவடைந்த செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல் நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் போட்டியிலும் நான் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. ஆனால், தற்போது நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி. இது 2 வீரர்களுக்கு இடையிலானது. எனவே, இந்தப் போட்டியில் கவனத்துடன் செயல்படுவேன். போட்டி என்று வரும்போது விட்டுக்கொடுக்க முடியாது. இந்தப் போட்டியில் எனது அனுபவம் எனக்குக் கைகொடுக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago