பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் ரிஷப் பண்ட் அடித்த டி20 ரக சிக்ஸர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுத்தது.
இந்திய அணி அப்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் என்று இருந்தது. நேற்று கம்மின்ஸ் பந்து வீச்சும் சரியாக அமையவில்லை. அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ரிஷப் பண்ட் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைக்கும் விதமாக ஆஃப் ஸ்டம்ப் பக்கம் நகர்ந்து வந்து கம்மின்ஸின் ஆஃப் வாலி பந்தை ஸ்கொயர் லெக் மேல் அப்படியே பிளிக் செய்தார். அங்கு ஷார்ட் பவுண்டரி, பந்து சிக்ஸ்.
ஜேம்ஸ் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஷாட் ஆடியது, ஜோப்ரா ஆர்ச்சரை ரிவர்ஸ் ஷாட் ஆடியது என்று ரிஷப் பண்ட்டின் பிரம்மிப்பூட்டும் ஷாட்களில் கம்மின்ஸை அடித்த சிக்ஸ் நம்பர் 1 என்றுதான் கூற வேண்டும், பொதுவாக 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் என்றால் அம்மாதிரி பந்துகளை மிட் ஆஃபில் தட்டி விட்டு சிங்கிள் எடுப்பார்கள். அதுவும் கம்மின்ஸ் போன்ற பவுலர் வீசினால் 6 விக்கெட்டுகள் போன பிறகு சிங்கிள் கூட எடுக்கத் தயங்கி தடுத்தாடுவதைத்தான் பார்த்திருகிறோம். ஆனால், இந்த ஷாட் அதியற்புதங்களில் ஒன்று.
வர்ணனையில் இருந்த ஹர்ஷா போக்ளே, ‘லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதை நிறுத்துங்கள், இதுதான் ரிஷப் பண்ட்’ என்றார்.
இன்னொரு வர்ணனையாளர் ஓ’கீஃப் ‘இது பாட் கம்மின்ஸ்யா! ரிஷப் என்ன செய்து விட்டார் பாருங்கள்!’ என்ற ரீதியில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆனால், டெல்லி கேப்பிடல்ஸில் ரிஷப் பண்ட்டை பார்த்துப் பழகிய டேவிட் வார்னர், “டிரேட் மார்க் ரிஷப் பண்ட். ஐபிஎல் தொடர்களில் இப்படிப்பட்ட ஷாட்டை அவர் ஆடி பார்த்திருக்கிறேன். அது ஹாஃப் வாலி பந்து. காத்திருந்து இப்படி ஒரு ஷாட்டை ஆடினார். அந்தப் பந்தை அவர் மிட் ஆஃப் திசையில் தள்ளி விட்டு சிங்கிள் எடுத்திருக்கலாம்” என்றார்.
ஹர்ஷா போக்ளே கூறும்போது, “அவர் இப்படி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இங்கு கொஞ்சம் பவுண்டரிகள் பெரிது, அங்கு பீல்டர் நின்று கொண்டிருக்கிறார் அதுதான் ஆச்சரியம்” என்றார்.
வார்னர் மேலும் கூறும்போது, ‘மற்றவர்களுக்குத்தான் அது ரிஸ்கி ஷாட், ஆனால் பண்ட்டிற்கு அல்ல.” என்றார்.
லெஜண்ட் ஆலன் பார்டர் கூறும்போது, “இதை என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என்றார். கவாஸ்கரோ ‘இதுதான் ரிஷப் பண்ட்’ என்றார்.
ஆஸ்திரேலியா ஆல் அவுட்: பெர்த் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 112 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் மதிய உணவு நேர இடைவேளைக்கு முன்பாக அவர் ஆட்டமிழந்தார். 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறது. கேப்டன் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago