மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றப் பிறகு தற்போது தான் நலமாக இருப்பதாக அர்ஜெண்டினாவின் டிகோ மரடோனா தெரிவித்திருக்கிறார்.
நைஜீரியாவுனான வாழ்வா, சாவா ஆட்டத்தில் 2-1 என்று வீழ்த்திய அர்ஜெண்டினா வெற்றி நாக் அவுட் சுற்றில் பிரான்ஸை சந்திக்கிறது. அர்ஜெண்டினாவின் வெற்றிக்கும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி, ரோஜோ ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.
அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை மைதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆக்ரோஷமாகவும் கொண்டாடினார் அந்நாட்டின் முன்னாள் நட்சத்திரர் டிகோ மரடோனா.
இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் அவருக்கு மைதானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சற்று மயங்கிய நிலையில் காணப்பட்ட மரடோனவை உடனடியாக அவரது சக தோழர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் மருத்துவரை பார்த்தப் பிறகு தற்போது நான் நலமாக இருப்பதாக மரடோனா தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மரடோனா, "நான் நலமாக இருப்பதை அனைவரிடமும் கூறிக் கொள்கிறேன். நான் மருத்துவரை பார்த்தப் பிறகு அவர் என்னை வீட்டுக்கு கூறும்படி கூறினார் ஆனால் நான் போட்டியை முழுமையாக கண்ட பிறகுத்தான் செல்ல முடியும் என்றேன். நான் எப்படி செல்ல முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த நடைபெறும் நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினா பிரான்ஸை சனிக்கிழமை எதிர்க் கொள்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago