சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (சென்னை ஐஐடி) உள்ள NCAHT, R2D2 மையங்கள், RRD நிறுவனத்துடன் இணைந்து, இன்று முதல் 3 நாட்களுக்கு ‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ என்ற விளையாட்டுப் போட்டியை இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடத்துகின்றன.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத் திறனாளிகளுக்கான தகவமைப்பு விளையாட்டுப் போட்டிகளை இந்த மூன்று நாள் நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2024 நவம்பர் 22 முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் மொத்தம் 100 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை ஐஐடி-ன் உதவும் நல்வாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையம் (National Center for Assistive Health Technologies –NCAHT), சென்னை ஐஐடி-ன் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையம் (TTK Center for Rehabilitation Research and Device Development - R2R2) ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட இந்த முன்னோடி முயற்சிக்கான நிதியுதவியை ஆர்ஆர்டி (RRD) என்ற பன்னாட்டு நிறுவனம் வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியை சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயன் என். கும்மாடி தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் மனீஷ் ஆனந்த், ஆர்ஆர்டி கோ கிரியேட்டிவ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் கவுசிக் சராவாகி உள்ளிட்ட இதில் தொடர்புடைய பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணன் என்.கும்மாடி, “திறமை- அனைவருக்கும் விளையாட்டு நிகழ்வு மாற்றுத் திறனாளிகளுக்கான தளத்தை வழங்கும் வகையில் தனித்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமூகப் பங்கேற்பை செயல்படுத்துவதில் தகவமைப்பு விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும், மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களது திறமைகளை அடையாளம் காண்பதும், தகவமைப்பு விளையாட்டுகளில் எதிர்கால வாய்ப்புகளுக்கான நம்பகமான திறமைகளை வளர்ப்பதற்கு உதவுவதே எங்களது குறிக்கோளாகும்” எனக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் சத்யநாராயணா என்.கும்மாடி மேலும் கூறுகையில், “மாற்றுத்திறனாளி மாணவர்களை (SwD) ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கிய கல்வி (IE) முயற்சியின் கீழ் பல்வேறு சேவைகளை இக்கல்வி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. உள்ளடக்கிய கல்விக்கான பிரத்யேக ஆசிரிய ஆலோசகரைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி, கல்வித் தங்குமிடங்கள், தன்னார்வ சேவைகள், அணுகக்கூடிய கற்றல் வளங்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை இக்கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுதவிர, உள்ளடக்கிய கல்விக்காக நிபுணர்களுடன் இணைந்து செவிப்புலன்- காட்சி- இயக்கத்திற்கான உதவித் தொழில்நுட்பங்களையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. உளவியல் தேவைப்படும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதுடன், பல்வேறு நல்வாழ்வு நடவடிக்கைகளையும் இக்கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (அனைவருக்கும் சென்னை ஐஐடி) முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக உள்ளூர் மக்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் கவனம் செலுத்திவருகிறது. ஆய்வகங்களில் ஆய்வுப் பணியை மேற்கொள்வது மட்டுமின்றி அவற்றை சமூகத்திற்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும் உதவி சாதனங்களையும் மறுவாழ்வுத் தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் இக்கல்வி நிறுவனம் முன்னோடியாக செயல்படுகிறது.

சென்னை ஐஐடி தனது வெளிப்புற, உட்புற கட்டிடங்களை அணுகக்கூடிய வகையில் ஒருங்கிணைத்துள்ளது. மாடிகளில் அமைந்துள்ள விடுதிகள், அனைத்துத் துறை கட்டடங்கள் ஆகியவற்றுக்கு லிஃப்ட் வசதிகளுடன், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக பிரத்யேக வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்விச் சூழலில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இதர நிறுவனங்களுடன் இக்கல்வி நிறுவனம் கலந்தாலோசித்து வருகிறது.

இந்நிகழ்வு குறித்து விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் மணீஷ் ஆனந்த், “R2D2, NCAHT ஆகியவற்றின் தொடர்ச்சியான நடவடிக்கையாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்நிகழ்வு அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்குவதுடன், உள்ளடக்கிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு வயதுடைய, பல்வேறு குறைபாடுகள் உடைய நபர்களை ஒன்றிணைப்பதன் வாயிலாக உடல்நலமும் சமூக ஒருங்கிணைப்பும் ஊக்குவிக்கப்படுகிறது. அத்துடன் மறுவாழ்வு நடவடிக்கைகளில் கவனிக்கப்படாத அம்சங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. சமூகத்தில் உடல்ரீதியான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன், தங்கள் கடந்தகால குறைபாடுகளைக் கடந்து சாத்தியக் கூறு அம்சங்களைக் காண உந்துசக்தியாக R2D2, NCAHT செயல்படுகிறது” என்றார்.

RRD GO CreativeSM இன் நிர்வாக இயக்குநரும் மூத்த துணைத் தலைவருமான கவுசிக் சராவாகி, "உடல் ஆரோக்கிய நலன்களைத் தவிர, தகவமைப்பு விளையாட்டுகள் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு சமூக உணர்வையும் அவர்களின் மனநலனுக்கான சிறந்த விடுதலையையும் வழங்குகிறது. பயிற்சிகளை மேற்கொண்டு ஒரு அணியில் பங்கேற்கும்போது உங்களுக்கு ஆதரவாக உற்சாகப்படுத்தவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நபர்கள் இருக்கும்போது மனதுக்கும் உடலுக்கும் அற்புதங்களைச் செய்ய முடியும், அதனால்தான் பாரா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் RRD செயல்படுகிறது. பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், ஊடகங்கள் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் ஆகியோரிடமிருந்து அதிகளவில் ஆர்வத்தை உருவாக்க முயன்று வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

‘திறமை- அனைவருக்கும் விளையாட்டு’ நிகழ்வுகளை 2024-25ல் மூன்று முறை நடத்தத் திட்டமிடப்பட்டு அதில் முதலாவது நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு நிகழ்வுகள் மூன்றுநாள் விளையாட்டு முகாமாக நடத்தப்படும். முதன்மையாக இயக்கக் குறைபாடுள்ள நபர்களை வெவ்வேறு தகவமைப்பு விளையாட்டுகளில் அறிமுகப்படுத்தி பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளில் அமெச்சூர், தொடக்க அனுபவமுள்ள சுமார் 100 பங்கேற்பாளர்கள் பயிற்சியாளர்களைத் தொடர்பு கொள்ளவும், விளையாட்டுகளில் ஈடுபடவும், தகவமைப்பு விளையாட்டுச் சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இறுதி நிகழ்வில் அறிவாற்றல், செவித்திறன், பார்வைத்திறன் குறைபாடு உள்ள பரந்த குழுக்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தும் விளையாட்டுத் திருவிழா நடைபெறும். குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளைக் கவனித்துக் கொள்வோருக்கும் வேடிக்கை அளிக்கும் நிகழ்வாகவும் இருக்கும்.

நடைபெற உள்ள விளையாட்டு நிகழ்வுகள் பின்வருமாறு: I. சக்கர நாற்காலி கூடைப்பந்து. II. சக்கர நாற்காலி பூப்பந்து. III. சக்கர நாற்காலி டென்னிஸ். IV. சக்கர நாற்காலி கிரிக்கெட். V. சக்கர நாற்காலி பந்தயம். VI. டேபிள் டென்னிஸ். VII. எறிதல் நிகழ்வுகள் - ஈட்டி, வட்டு, குண்டு எறிதல். VIII. போசியா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்